• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

❣️குயிலே குயிலினமே..!❣️

நானூறு மைல் தொலைவில் அருகிருந்தவள்
நாற்பது மைல் தொலைவில்
சிறையிட்டு கொண்டவள்...
​

தான் கொண்ட அன்பினை
பகிர தயங்கியவள்
கொள்ளை ஆசை கொண்டும்
வெளி கொணர பதறியவள்...


கட்டு கட்டாய்
பக்க உரையாற்றும் எனையும்
மௌன மொழியோடு
பக்கம் இருக்க கற்றுத்தந்தவள்...
​

வாய்ப்புகள் இருந்தும்
வாளின் கீறல்கள்
கட்டியணைத்திட துடித்தும்
கிட்டிச் சேரா நிமிடங்கள்...
​

விழிகள் காணவில்லை
விரல்கள் தீண்டவில்லை
இதயத்தில் அழுந்தும் வலியிலும்
விழியோர ஈரத்திலும்
என் சுவாசக்காற்றை விட்டுச் செல்கிறேன்
என்னை நினைத்து நீ சுவாசிக்கும் நொடியில்
உன்னிதயத்தை மென்மையாய் வருடிட...
View attachment 190309

ரணங்களின் நொடிகளில்
ராக கீதங்களின் மடியில்
உன்னோடு நான்!!!
View attachment 190310
​
Mathikalangiyaval manipu ketka mudiamal vetki kunigiral .
 
Mathikalangiyaval manipu ketka mudiamal vetki kunigiral .
வெட்கி குனிந்திடும் பாரமும்
இவ்வகம் அறியும்...
தலை நிமிர்ந்து சிறகடித்திடு
உன் சிதறல்களை

இக்குருவியின் அகம் தாங்கிடா...
❤️
​
 
விழிகளும் விரல்களும்​

அது ஓர் கனா...
விழியோரம் சிறு விழிநீர் சிதறலில்
விழித்தெழுந்த கனா...

ஓ... உடன் யாரும் இல்லையே!!!
தலையணையும் சற்று
விலகியிருந்த நொடிகளில்...
விழி போன பயணம் தனிமையோ...
​

கண்ணிமைக்கும் பொழுதில்
தனிமைக்கு துணையாய்...
விழித்திருந்த விழிகளின்
விரல் தீண்டிய பதிவுகள்...

விழிநீர் சிதறல்களையும்
விழித்தெழுந்த கனாவையும்
வாரிக்கொண்டது என்னவளின்

விட்டு விலகா விழிகளும், விரல்களும்!!!​

20240114_031224.gif​

:heart1:
​
 
மெய் மொழிந்த உயிர் எழுத்துக்களில்...​

அலை அலையாய்
ஆயிரம் எண்ண அலைகள் அலைந்திடினும்
இதழ் சுவைக்க அறுசுவை உணவிருப்பினும்
ஈர விழியோரமாய் போகுமிடமெல்லாம்
உன் முக/விழி/குரல் தேடலில்
ஊன் கரைந்து
எண்ணம் சிதைந்து
ஏங்கும் இதயத்தை
ஐந்தங்குல இடைவெளியிலேனும்
ஒன்றிட வருவாயா!!!
ஓயாத அலைகளுக்கு
ஔனமிடுவாயா!!! என்
ஃபாரிஹா!!!❤️✨☘️

images (30).jpeg​
ஔனம் - மருந்து
ஃபாரிஹா - அழகி
​

✨
ஒரு பொழுதேனும் உன் மடியில் துயில

ஒரு முறையேனும் உன்னிதழ்கள்
என்னுணவை சுவைத்திட...​

 
"Sometimes all you need is
for someone to sit with you and
hold space for you
to share whatever is in your heart."
☘️
​


தூரங்களும், துயரங்களும் துளைத்திடா
நீ எனதருகே இருகையில்....
✨
ஓர் பார்வை, சிறு புன்னகை போதுமே!!!

❤️
​
 
"Sometimes all you need is
for someone to sit with you and
hold space for you
to share whatever is in your heart."
☘️
​


தூரங்களும், துயரங்களும் துளைத்திடா
நீ எனதருகே இருகையில்....
✨
ஓர் பார்வை, சிறு புன்னகை போதுமே!!!

❤️
​
NaZ
 
❣️உந்தனருகினிலே!!!❣️​

உன் காது மடல் அருகே...
என் மூச்சுக்காற்றின் சுவாசங்கள் ததும்ப...

உன் கை விரல்களோடு
என் விரல்களைக் கோர்த்து...

மெல்ல அணைத்து
உள்ளங்கள் இணைந்து...
கனவினிலே குயிலிசை மீட்டிட
உறங்கியிருப்போம் வா!!!

View attachment 90563
என்றும், எங்கும் உன் நினைவில்...!
​
உந்தனருகினிலே!!!❣️​
Nice lines
❣️உந்தனருகினிலே!!!❣️​

உன் காது மடல் அருகே...
என் மூச்சுக்காற்றின் சுவாசங்கள் ததும்ப...

உன் கை விரல்களோடு
என் விரல்களைக் கோர்த்து...

மெல்ல அணைத்து
உள்ளங்கள் இணைந்து...
கனவினிலே குயிலிசை மீட்டிட
உறங்கியிருப்போம் வா!!!

View attachment 90563
என்றும், எங்கும் உன் நினைவில்...!
​
உந்தனருகினிலே!!!❣️​
Arumai
 
✨பட்டாடை உடுத்தி வந்த பட்டு ரத்தினமே♦️
தங்க ஜரிகை கொண்டு செதுக்கிய ரவிக்கையே...
சிந்திய முத்துச்சிரிப்பில் சிந்தையை
குளிர்வித்த செண்பகமே...
கார்க்குழலில் மலையருவி போல்
வழிந்த மல்லிகையே...


உயிர்களை துளிர்க்கச் செய்யும்
இரு வரி கிறுக்கல்களே...
இவை கொண்ட சாயல்,
தெய்வதின் நிழலோ
சிறகில்லா தேவதையோ!!!
​

உன் கால் தடங்களிளும்
உயர் தளங்களிலும்
சிறப்பம்சங்கள் சூழ்ந்திட...
நெற்றி புருவங்கள் உயர்ந்து
விழி வியக்க, அகமகிழ
சிறகில்லலாமல் சிறகடிக்கும்
இவ்விதயக்கவியை கேளாய் கண்மணியே!!!


ஓ... வழியெல்லாம் பூங்கொத்தின் வரவேற்போ
விழியெல்லாம் பூங்கொடியின் எதிர்பார்ப்போ...
​

அலுவல் அலுப்பிலும் அலைபாயும்
விழிகளுக்கு விருந்தாகிடவே...


கிட்டிச் சேரவில்லை மலர் கொடியே...
எட்டி இருக்கும் இவ்ரோஜா வனத்தை
சற்று கண்ணமிட்டுச் செல்லடி...
மைவிழியாள் பார்வையில்
மயங்கி
சிதறும் இப்பூவிதழ்கள்
உன் பாதங்களில் முத்தமிட...​

இனிய ரோஜா தின வாழ்த்துக்கள்!!!

:heart1:


20240207_224353.gif​




❤️✨☘️
​

 
Last edited:
சிறகில்லாமல் சிறகடிக்க வைத்தாய்
நொறுங்கிய இதயத்தை ஒன்றிணைத்தாய்...
​

நெருங்கி வருகையில் சிறை வைத்தாய்,
தூர விலகிட மனமில்லை...

தூரங்களிலும் துயரில்லை,
துணையிருக்க துயருகிறேன்...


உடனிருக்க ஏங்கும் எனையும்,
தோழியாய்/காதலியாய்/வழித்துணையாய்...
ஏற்றுக் கொள்வாயா!!!
​

முன்மொழி திருநாள் வாழ்த்துக்கள்!!!

:heart1:

images (5).jpeg

​



❤️✨☘️​


 
தித்திக்கும் தேன் கரும்பாய்
மணம் கமிழும் தேனரும்பாய்...
கவி பாடும் தேன்மொழியாளின்
குரல் கேளாய் பூங்குயிலே...


அள்ளிக்கொள்ள கைகளுண்டு
அன்னமிட எண்ணமுண்டு...
...
​
ஓர் நொடி பொறுத்திடு...
இங்கே,
கண்படும் கண்களுமுண்டு...
எனவே,
​
இதயப்பூரிப்பின் மறைவில்
இதழ் திறா மொழியில்...
பொட்டி கட்டி கொள்கிறேன்
என்னாசை கனவுகளை பூச்சூட்டி!!!



இனிய இன்னட்டு தின வாழ்த்துக்கள்!!!

:heart1:

Screenshot_20240209-215541~2.png

​



❤️✨☘️

டர...ரவ் டர டர டரரௌ
டரரௌ...


20240209_221007.gif​

 
கை கொள்ளளவு இதயத்தில்
எண்ணடங்கா உறவுகள்...
சிலவை உடனோடு
சிலவை நினைவோடு...
​
​
உடனிருக்கும் உறவில்
சிலவை அன்பிற்கென
சிலவை தேவைக்கென...

​
இதை வகையறா வாழ்வில்
ஓர் பொம்மை போல்
உழன்றிருந்தேன்...
​
​
இதோ என் வாழ்வில் ஓர் குரலோசை...

இது நீ,
இது உனது,
இதை காணாதே,
இதை தீண்டாதே,
அதை செய்யாதே,
அங்கு செல்லாதே,
...
​
என பலவாறு வகையறுத்து,
எனை வரையறுத்து உருவாக்கிற்று...
​
​
உயிர் துளிர்த்த பொம்மையாய்...
ஆறடி உயிரோடு
உறவாடிய நாட்கள் இது...


அக்குரலின் குயிலோசை
என்றும் என் காதில் தொனித்திடுமா!!!

​
கூட இரு போதும்...
என ஏங்கும்
உந்தன் நண்பியாய்...
​


இனிய டெடி-டே வாழ்த்துக்கள்!!!

:heart1:

images (6)~2.jpeg
​




❤️✨☘️

​
எதிரொலியாய்...
என் துணையாய்...​
​

 
கற்றவை நினைவிலில்லை
பெற்றவை பதிவிலில்லை...
தந்தவை வரவிலில்லை
மற்றவை ஏற்க மனமுமில்லை...

​
சுற்றவை யாவிலும்
சிக்கிக் கொண்டிருக்க...

​
நீங்கா நினைவில்
உன் நிழல்கள்
சிறகடிக்க...
என்னகம் வந்த பறவையே...​

மறதி என்னில் பாதி எனினும்
குருதியின் ஓட்டம் முற்றும் வரையில்...
உன்னகத்தில் சிறை வைத்திருக்க
வாக்குறுதி கொள்வாயா!!!

இனிய வாக்குறுதி நாள் வாழ்த்துக்கள்!!!

:heart1:

pinky-promise-animation-cpj5yhy740xkkxx9.gif
​



❤️✨☘️
​
திருமொழி சொல்லாய்...​

 
இட பக்க புருவமது
அருவாளின் தோற்றமாயினும்...
உனதருகே நிழலிட ஏங்கும்
எனது நிழல் தீண்டா வரிகள்...
​
​
நெருடல்களின் விழி அசைவிலோ
இதழ் மூடா புன்சிரிப்பிலோ...
இரு புருவம் தீண்டா தொலைவிலேனும்
எனை கட்டிக் கொள்வாயா!!!


இனிய கட்டிப்புடி-டே வாழ்த்துக்கள்!!!

:heart1:

நெருக்கிடுமோ??? எந்தன் இறுக்கமும்!!!
...
நெருக்கிடட்டும் உந்தன் இறுக்கம்
என்னெஞ்சின் சிதறல்களை
சித்திரமாக்கிட...

images (4).jpeg

​



❤️✨☘️

​

 
என்றும் இலாத திருநாளாய்
கண் கண்ட இடமெல்லாம்
முத்தச்சுவடுகள் இருக்க...


விழி காண வியந்த முதல் முத்தத்தை
மறந்திடுமா இச்சுறு நெஞ்சமும்...
​

பாசம் கொண்ட ஆசை முத்தம்
நெற்றியில் பதித்திட்ட அக்கறை முத்தம்
இடமறியாமல் சிதறிய ஊடல் முத்தங்கள்
போதும் என கூறாத இதழ் முத்தங்கள்...

பித்தம் முற்றும் முன்
முற்று புள்ளியிட்டு கொள்கிறேன்.



சத்தமில்லாமல் முட்டிக்கொள்ளும்
வெண் பஞ்சு மேகங்கள் போல்
பட்டும் படாமல் இட்டுச்செல்லுமா
உன்னிதழ் முத்தங்கள்...


முத்தத் திருநாள் வாழ்த்துக்கள்!!!

:heart1:

aesthetic-banner.gif
​



❤️☘️✨
​


 
காதலர் தினமாம்...
​
நீண்ட உரை பதித்திட எண்ணி
சொற்களில் வண்ணம் திட்டி
வர்ணனை கனவுகள் கொண்டு
சமர்ப்பிக்க அள்ளி வந்தேன்...
​
​
மின்சாரமில்லா நிசப்த நிமிடங்கள்...
கடிகார ஓசையோடு
என்னிதய துடிப்பும்
மெட்டு போட்டிட...
நகர்ந்த நொடிகளில்
துளிர்த்த இருவரிகள்...


என்னவளின் நெஞ்சில் விளையும் என் நினைவலைகளை
மிஞ்சிடுமோ என் கவி வரிகள்...

உனை போல் என் காதலை
உணர்ந்தவர் யாரடி கண்மணியே!!!

​
Advance
காதலர் தின வாழ்த்துக்கள்!!!

:heart1:

​



❤️☘️✨
​

​
 
நீல வானச் சிறகின்
வெண்பஞ்சு மேகத்தில்
சற்று துயில் கெண்டு வரட்டுமா...

விழி காணா பதிவுகளிலும்
விழி கண்டும் விரல் தீண்டா பதிவுகளிலும்
நடை போட்டுக் கொண்டிரு...
​

நாம் செல்லும் தூரம்
தொடு வானமாகும்...​

3be0014a783af99e2d097be6df608a30.gif

❤️✨☘️


:heart1:​
 
​
புதிதென இதயத்தில் கோர்த்திட
ஏதுமில்லை கண்மணியே...

​
எத்தொலைவில் இருப்பினும்
எந்நினைவில் மலர்ந்திடுவாய்...
நின் விரல்களில் மிளிர்ந்திட்ட
இவ்வெள்ளை பூவினைப்போல்!!!
​

Happy Valentine's Day Pattukutty!!!
❤️✨☘️

​
14/02/24 10.51pm​


இதயத்தில் பதிந்த எனை
கழுத்தில் கட்டி கொள்ள விளைந்தேன்...

கண் படா இடத்தில் அல்ல
கைக்கெட்டும் தொலைவில் விதைத்தாள்..

​
16/02 11.48pm​


என்னிதயத்தில் முன்பே துளிர்த்த விதை
இன்று கொழுந்து இலைகளாய் துளிர்க்க...
​
அவைகள்...
என் செவியில் குளிரும் இதழ் சொற்களாயினும்...
இதயத்தின் அழுந்திய கசந்த நினைவுகளில் நான் உழல...

​
எப்போதும் போல் அதீத எண்ணங்கள்...​
​
வேறேதும் எதிர் பாராது செவி சேர்ந்த
மூன்று வார்த்தைகள்...


கூட இரு போதும்.
​
எந்தன் காயம் ஆறவில்லையே
என்ற நொடியில் கேட்ட அதே
மூன்று வார்த்தைகள்...


கூட இரு போதும்.

​
விட்டுக் கொடுப்பது புதிதல்ல
விலகி கிடப்பது புதிதல்லவா...
விரல்களை நறுக்கி கொண்டேன்
சற்று விலகியிருந்திடு என...
​
​
ஐய்யகோ...
விரல்களுக்கிட்ட விலங்கை
என் நினைவுகளுக்கிட இயலவில்லையே!!!

மீண்டும் அதே வார்த்தைகள்...


கூட இரு போதும்.
​
எனக்கென ஏதேதோ செய்கிறாயே
நான் என் செய்வேன் என்ற நிலையில்

மீண்டும்...
​

கூட இரு போதும்.

உற்றமும் சுற்றமும்
உற்ற நட்பும் கூட
தள்ளி வைத்திட்ட எனை
முற்றும் இவளென எனை
அள்ளி கொண்ட என்னவளின்
அம்மூன்றும் வார்த்தைகள்...

images (9).jpeg


கூட இரு போதும்.

​
25/02/24 10.43pm​


மங்கையாகினாய்
மாந்தர் தம் வாழ்வில்
விளக்கேற்றிடும் மாதுமாகினாய்...

​
அண்டி வந்தோர்க்கு
உயிர் மீட்டும் ஒளிச்சுடராகினாய்...

அன்பினார்க்கு இல்லாளாகினாய்...


எண்ணிய கணமெல்லாம்
கானலாகிய போதும்,
துயரதை தூரத்தில் வைத்து
துவளா தூணாகிடுவாய்...

​
மாதுவாய், ஒளிச்சுடராய்
இல்லாளாய், தூணாய்...
இன்னும் சிலருக்கு ஆணி வேராய்
முதுகெலும்பாய், பக்க துணையாய்...
...
​
எந்தனுக்கோ யாதுமாய்,
போதும் என கூறாது இவள் அன்பு...

​
விண்ணொளியில் கண் சிமிட்டும்
விண் சூடரொளியே...
செல்லும் பாதையில் சறுக்கல்கள் இருப்பினும்
எண்ணம் எதிலும் உறுதுணையாகிடு...


நாம் காண கோடி காட்சிகள் உண்டு
இவ்வையகதனில்...

​
கைக்கோர்த்து கதை பேச
காலம் முழுதும் உன்னோடு நான்.
Hun❤️
​


❤️மங்கையர் தின வாழ்த்துக்கள்❤️
✨தங்க பதுமையே!!!✨
☘️

images (4).jpeg

Bhaaaa... Pattukutty...
Piggyback yerikoo...

GIF_20240402_021908_047.gif​
08/03/24 11.48pm​


எங்கனம் சொல்வேன்
கட்டுக்குள் வைத்திட...
​
​
அக்கடவுளுக்கும் கண்ணில்லை
கொண்ட காதலுக்கும் கண்ணில்லை...

​
எனை மீறி, எல்லை தாண்டி
குளிர்ந்திடும் இப்பாதங்களிடம்
எங்கனம் சொல்வேன்...
கட்டிலறை நினைவுகளை
கட்டுக்குள் வைத்திட...

Enakei~2.jpeg
​
பல மைல் தொலைவிலிருந்தும்
அருகே உணரும் உனையும்,
விரல் கோர்த்து
இதயம் துளிர்த்த நொடிகளையும்...
எங்கனம் சொல்வேன்...
கட்டுக்குள் வைத்திட...


விரல் சேர்த்து இதழ் பதித்த
முதல் முத்தத்தையும்,
விரல் பிரிந்து விடை கொடுத்த
கடைசி தீண்டலையும்...
எங்கனம் சொல்வேன்...
கட்டுக்குள் வைத்திட...

...

​
இடம்கொடாது இச்சிந்தையும்
நினை தீண்டாது...
கவிகளிலும் கூட...
​

எங்கனம் சொல்வேன்...
கட்டுக்குள் வைத்திட...

Vintage~2.jpeg​
கட்டுக்குள் இயலாவிடினும்
கட்டி வைத்துக்கொள்கிறேன்.
ஒரு முறையேனும்
உன் விழியாகினும்
எனை தீண்டி விடாதா என...


​
நீதான் தேவை என்...

13/03/24 12.46am
​


விடையறியா வினாக்களுக்கும்
செவி சேர்ந்த விடைகளுக்கும்
இடம் விட்டுச்சென்றதோ இம்மௌனங்கள்...


3790db54-af90-43eb-b553-6161aba6eb5f.jpeg

அகவும் மயில் மொழியினுள்
அகச்சிறையாகினேன்...
அக்கணம் தாண்டி
அகம் தேடும்
அகல் விழியாளின் வருகைகெனவே!!!

​
16/03/24 03.02pm​



என்னகம் மகிழ காணும் காட்சிகளிலும்
நின் முகம் நிழலிடுவதும் ஏனோ!!!

❤️​
18/03/24 10.46am ​


தொடும் தொலைவில் நீ இல்லையெனினும்
நினைத்திடும் நொடிகளில்
அணைத்திடும் உன் உணர்வுகள் போதுமடி...
மூச்சுக்காற்றின் திணறலிலும்
முட்டி மோதிய உன் நினைவலைகளில்...
என்னோடு நீ!!!


a66fece3-7898-40ac-8f2f-042cbc29109f.jpeg


மூச்சிலே வான் ஒலி பாடுதே!!!

:heart1:​
22/03/24 11.48pm​

​
நெஞ்சில் பாரம் சேராது
சற்று விதும்பு விழிநீர் துளிர்த்திடு...


​
கானல் கடல் கப்பலின்
ஓர் அகதியின் காதலாகினும்
கண்ணீர் துளிகளால்
இச்சுமை தீராதெனினும்...
சிதறும் சிறு துளிநீர்களால்
இலகுவாகட்டும் இதயமதின் பாரமும்...


ffef51cc-26a1-4c6e-a64f-41b66ba186a6.jpeg
25/03/2024 03.36am​



Memories Azhagu...

6eb79b0a-a0c5-4933-a062-5827451a1c78.jpeg
​

28/03/2024 03.12 pm​


உடல் அலுப்பிலும்
உறங்கவில்லை உன் நினைவுகள்...

இங்கே என்னிதயம் கனத்திட
அங்கே என் செய்கிறாய்?
கருவளையத்தை மெறுகேற்றுகிறாயோ...


images (6)~2.jpeg​

​
31/03/2024 2.14 am
​
​
 
Top