• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

❣️குயிலே குயிலினமே..!❣️

எல்லாம் கடந்து சரியாகிவிடும்
உனக்கு நான் இருக்கிறேன்
எனக்கு நீ இருக்கிறாய்

நமக்கு பல நல்ல உறவுகள் இருக்கிறது !

நீ மனதளவில் மிக
வலிமையானவள் !
இங்கு குயில், மயில் என சிறகடித்து பறவையாய் பறக்கும் உனக்கு பறவை கதை❤️


நாம் தொடுவானதில் பார்த்து
பிரமிக்கும் பறவையின் வாழக்கை
நாம் நினைக்கும் அளவுக்கு

அவ்வளவு எளிதல்ல !

பல சமயங்களில் எந்த கிளைகளையும்
சொந்தம் கொண்டாட முடியாத அனாதைகள் !
பகலில் ஒரு கிளை !
இரவில் ஒரு கிளை !
வெயிலுக்கு ஓர் வீட்டின் உப்பரிகை !
மழைக்கு ஒரு கோவில் கோபுரம் !
புயலுக்கு ஒரு சிதிலம் அடைந்த பழைய கட்டிடம்!


வெல்லப்பெருக்கெடுத்து
ஓடும் ஆற்று நீரில் சில நாள் !
சாலையில் தேங்கிய நீரில் சில நாள் !
மொட்டை மாடி கொட்டாங்குச்சி நீரில் சில நாள் !
வற்றிய ஏரி கரையில் சில நாள் !
தினம் தாகத்திற்கே நீரை தேடி போராதும் நிலை !

நாளை நிச்சையமில்லாத எளிதற்ற வாழக்கையை
வாழும் பறவையே " நாளை இருக்கிறது" என்ற நம்பிக்கையுடன்


இரு இறகுகளையும் இலகுவாக உதறிவிட்டு
துன்பங்களை மறந்து ஒய்யாரமாக பாடி
ஊரே தலை நிமிர்ந்து பார்க்கும் அளவிற்கு
உயரே உயரே பறந்து போகும்

எல்லாம் கடந்து சரியாகிவிடும்
உனக்கு நான் இருக்கிறேன்
எனக்கு நீ இருக்கிறாய்

நமக்கு பல நல்ல உறவுகள் இருக்கிறது !

நீ மனதளவில் மிக
வலிமையானவள் !
இங்கு குயில், மயில் என சிறகடித்து பறவையாய் பறக்கும் உனக்கு பறவை கதை❤️


நாம் தொடுவானதில் பார்த்து
பிரமிக்கும் பறவையின் வாழக்கை
நாம் நினைக்கும் அளவுக்கு

அவ்வளவு எளிதல்ல !

பல சமயங்களில் எந்த கிளைகளையும்
சொந்தம் கொண்டாட முடியாத அனாதைகள் !
பகலில் ஒரு கிளை !
இரவில் ஒரு கிளை !
வெயிலுக்கு ஓர் வீட்டின் உப்பரிகை !
மழைக்கு ஒரு கோவில் கோபுரம் !
புயலுக்கு ஒரு சிதிலம் அடைந்த பழைய கட்டிடம்!


வெல்லப்பெருக்கெடுத்து
ஓடும் ஆற்று நீரில் சில நாள் !
சாலையில் தேங்கிய நீரில் சில நாள் !
மொட்டை மாடி கொட்டாங்குச்சி நீரில் சில நாள் !
வற்றிய ஏரி கரையில் சில நாள் !
தினம் தாகத்திற்கே நீரை தேடி போராதும் நிலை !

நாளை நிச்சையமில்லாத எளிதற்ற வாழக்கையை
வாழும் பறவையே " நாளை இருக்கிறது" என்ற நம்பிக்கையுடன்


இரு இறகுகளையும் இலகுவாக உதறிவிட்டு
துன்பங்களை மறந்து ஒய்யாரமாக பாடி
ஊரே தலை நிமிர்ந்து பார்க்கும் அளவிற்கு
உயரே உயரே பறந்து போகும்
:inlove:oooo
 
எல்லாம் கடந்து சரியாகிவிடும்
உனக்கு நான் இருக்கிறேன்
எனக்கு நீ இருக்கிறாய்

நமக்கு பல நல்ல உறவுகள் இருக்கிறது !

நீ மனதளவில் மிக
வலிமையானவள் !
இங்கு குயில், மயில் என சிறகடித்து பறவையாய் பறக்கும் உனக்கு பறவை கதை❤️


நாம் தொடுவானதில் பார்த்து
பிரமிக்கும் பறவையின் வாழக்கை
நாம் நினைக்கும் அளவுக்கு

அவ்வளவு எளிதல்ல !

பல சமயங்களில் எந்த கிளைகளையும்
சொந்தம் கொண்டாட முடியாத அனாதைகள் !
பகலில் ஒரு கிளை !
இரவில் ஒரு கிளை !
வெயிலுக்கு ஓர் வீட்டின் உப்பரிகை !
மழைக்கு ஒரு கோவில் கோபுரம் !
புயலுக்கு ஒரு சிதிலம் அடைந்த பழைய கட்டிடம்!


வெல்லப்பெருக்கெடுத்து
ஓடும் ஆற்று நீரில் சில நாள் !
சாலையில் தேங்கிய நீரில் சில நாள் !
மொட்டை மாடி கொட்டாங்குச்சி நீரில் சில நாள் !
வற்றிய ஏரி கரையில் சில நாள் !
தினம் தாகத்திற்கே நீரை தேடி போராதும் நிலை !

நாளை நிச்சையமில்லாத எளிதற்ற வாழக்கையை
வாழும் பறவையே " நாளை இருக்கிறது" என்ற நம்பிக்கையுடன்


இரு இறகுகளையும் இலகுவாக உதறிவிட்டு
துன்பங்களை மறந்து ஒய்யாரமாக பாடி
ஊரே தலை நிமிர்ந்து பார்க்கும் அளவிற்கு
உயரே உயரே பறந்து போகும்
Azhagu motivation patootie ❤️
 
Sometimes I deserve silence....
வான் தொடும் நீலக்கடலின்
ஓயாத அலையில்
சிதறிய ஓர் விண்மீன்...
1000005901.gif
மீண்டும் உன் அன்பின் அலையினால்
எனை வாரிக்கொள்வாயா???



காத்திருக்கும் கடலோர
ஓடையின் ஓர் சிறுமீன்...
1000005902.gif

We deserve more than
what we have/want.

It's called ✨GRACE✨.
 
விழிநீர் துடைக்க
விரல்களுக்கு வலுவில்லாமல்,
உன் விழியினையும் காணக்கூடாமல்,
உன்னோடு நானும் கலங்கி
அரவணைத்து உறங்கிவிடுகிறேன்...

விடிந்து விலகும்முன்
உன் விழி காண்கயில்
உன் நெஞ்சோடு புதைந்திருப்பேன்...

உனை தேற்றிக்கொள்ள
உனை விட வேறாறும் வேண்டுவதில்லை...

1000006009.png
யாதும் அறிந்தும்
துவளும் கைக்குழந்தை அவள்!!!

❤️✨❤️
1000006012.gif
 
வழிமேல் விழி வைத்து காத்திருந்தேன்
என் பூவிழியின் வருகைக்காக...

நகர்ந்த நொடிகளனைத்திலும்
ஆர்வத்தில் மிதந்திட...

அவ்வெள்ளைத் தேரில்
இவ்வெள்ளை பதுமை தெரிந்திட...


அந்நீல வானின் பாதங்கள்
பொருத்தப்பட்ட இப்புவியின் கற்சுவடுகளில்
நீல வண்ண காலணியோடு பதிந்திட...

வெண்ணிற மேகமதின்
பச்சிளங்புற்களையும் பூக்களையும்
பதித்த ஆடையதில்,

பளிச்சிடும் மின்னலை போல
கை சைகை காட்டினாள்...
1000006282.jpg
பூவிழியால் மௌனத்தின்
மொட்டுகள் மலர்ந்த தருமது...
 
வழிமேல் விழி வைத்து காத்திருந்தேன்
என் பூவிழியின் வருகைக்காக...

நகர்ந்த நொடிகளனைத்திலும்
ஆர்வத்தில் மிதந்திட...

அவ்வெள்ளைத் தேரில்
இவ்வெள்ளை பதுமை தெரிந்திட...


அந்நீல வானின் பாதங்கள்
பொருத்தப்பட்ட இப்புவியின் கற்சுவடுகளில்
நீல வண்ண காலணியோடு பதிந்திட...

வெண்ணிற மேகமதின்
பச்சிளங்புற்களையும் பூக்களையும்
பதித்த ஆடையதில்,

பளிச்சிடும் மின்னலை போல
கை சைகை காட்டினாள்...
View attachment 156872
பூவிழியால் மௌனத்தின்
மொட்டுகள் மலர்ந்த தருமது...
:hearteyes:
 
கை சைகை காட்டிய
அவ்வானின் பாதங்கள்
வானபிரானோடும்,
இந்திர, சந்திர ஒளியோடும்
எனதருகே பவனி வரவே...

அணைத்திட துடித்த தோள்களும்,
கைகள் கோர்த்திட விரைந்த விரல்களும்
விலகி கொண்டதும் ஏனோ...

விழி காணா பூவிழியாளின்
விழி மொழிந்த வார்த்தைகள் கொள்ளாதது...

அருகிருக்கே விரும்பும்
இதயத்தின் கணத்த ஒலிகளும்,
இதழ் பேசா மௌனத்தின் மொழிகளும்...

என்னகமதில் அழுந்திடவே
அலட்டிக் கொள்ளாமல்
அடியெடுத்த நொடிகள்...

இதயக்குமறல்களை குழியினில் புதைத்து,
சினுங்கிய சிரிப்பொலியும்,
வர்ணணை வார்த்தைகளும் வெளிகொனற...

சீவி சிங்காரித்து, விரல் வர்ணங்களிட்டு,
அவ்வெள்ளை தேரில் உலா வரவே

அரங்கேறியதோ இவ்வெள்ளை பதுமையும்!!!
1000006300.jpg
 
வாய்ப்புகள்-விரக்தி-வாழ்க்கை

வாய்ப்புகள் எதிர் இருந்தும்
வாரிக் கொள்ளா ஒடிந்த
சிறகுகள்...

வாய்ப்புகளை தட்டிக்கழியாமல்
தழுவிக் கொள்ளா விரக்தியின்
பறவைகள்...

விரக்தியினை தகர்த்திடவே
சில பறவை சிறகுகள்
அடைகலமானதோ...

அடைக்கலமதையும் ஆதாயமாக்கி
மேலும் சிறகொடிக்கும் உறவுகள்...

சிறகொடிந்த பறவைகெனவே
தனை சிறையாக்கிய உறவுகள்...

முகமறியா உறவுகள் தரும்
இளைப்பாற்றை கூட
உடனிருக்கும் உறவுகள் அளிப்பதில்லை...

மெருகேற்றப்பட்ட அழகோவியம் கூட
காண்போரின் விழிகளுக்கு விருந்தாகிடும்...

அலமாரி புஸ்தகமும்
துசி படிந்த வீணையும்
சிற்பி திறா முத்தும்
இருந்தும் என்னத்திற்கு!!!

காலம் பதில் செல்லும்
என கழிந்த காலங்கள் பல...

அடுத்த அடி எடுத்து வைக்கும்முன்
சருக்கிடும் பாதையில் வாய்ப்புகள்...

வாய்ப்புகள் இருந்தும்
வாரிடும் உணர்வுகள்...

விரக்தியில் விடாய்த்த உணர்வுகளுக்கு
கானல் நீரும் சிறு மதுரமாகிறதோ...

மதரமதை பருகிடாமல்
அருகே வைத்து இளைப்பாறும் உணர்வுகள்...

இவ்விளைப்பாற்றையும் சிதறடிக்கும்
சில உணர்வுகள்...

மீண்டும் மீண்டும் விடாய்க்கும்
இவ்வுணர்களிடையே எங்கே பொழுதுண்டு
வாய்ப்புக்களை கொனற...

வாய்ப்புக்களில் கால் பதிந்து
காண்போரின் கண்கள்
வியந்து நோக்கும் நாட்களும் அருகில்
என எதிர் நோக்கிய நம்பிக்கையில்...


சரித்திரம் படைக்க விளையவில்லை
சுயசரிதை திலைக்க விளைகிறேன்...
1000006348.jpg
சுதந்திர பறவையென
ஜோடிக்கப்பட்ட பறவையின்

சிறகொடிந்த குமறல்கள்...
 
துயில் கொண்ட ராவிலும்
என் விரல் தீண்டல்கள்
உனதென உணர்ந்திடவே...

தலையணை அணைப்பில்
மீட்டாத வீணையிலும்
இசையமுது நவிழ்கின்றதோ...

பனியறையிலும்
பங்குனி வெயிலென
சுட்டெரித்த இதழ் தீண்டல்கள்...
1000006373.jpg
 
எனன பெற்றெடுத்த தாய்க்கு முன்
எனை தொட்டு முத்தங்களிட்டு
தழுவிய கரங்கள் எங்கே..!!!

எனக்கென இருக்கும் சில உறவுகளில்
உனை காண்பதால் எனவோ...

நாள்காட்டியை காணும் வரையில்
நினைவில்லை உன் மரணமும்...

அப்பா✨
அர்த்தமிலா மழலை மொழியின்
அர்த்தம் உணர்ந்தவன்...
வேலை பளுவிலும் என்னோடு
விளையாட மறக்காதவன்...

வீட்டுப்பாடம் முடித்துவிட்டு
பேசிக்கொண்ட உறங்கிய நாட்கள் பல...
தாலாட்டும் இதயத்துடிப்புடன்
என் மெத்தை அவன் மேனியாம்
என் போர்வை அவன் கரங்களாம்...

அன்னையின் கோபத்தில் துவள
அரவணைத்துக் கொண்டவன்...
பிழை செய்த எனை அடித்தும் வெறுக்காதவன்,
நேர் வழியில் நடக்க பாதை காட்டியவன்...

நட்பிற்கு இலக்கியமானவன்
துரோகிகளால் தொழிலை இழந்தவன்...
மாதின் மேல் நாட்டமிலாதவன்
மதுவினால் கூட்டை சிதறடித்தவன்!!!

உன்னோடு நானிருந்த வருடங்கள் பதின்மூன்றாயினும்
நான் கற்றிந்த காரியங்கள் ஏராளம்...

நுகர்வோரிடம் பேசும் தோரணையும்
நண்பர்களுடன் இருந்த பிணக்கமும்...
உறவுகளிடையே கொண்ட உரிமையும்
குடும்பத்தோடு கணிந்த கரிசனையும்...


தெளிந்த புத்தியுள்ளவனை
மதுவானது மதியீனமாக்கிவிடும் போல்
உற்ற நண்பர்களே துரோகிகளாய் மாறிட
தொழிலிலை தொலைத்து, தேடியதோ மது...

அவ்வைந்து வருடங்களும் உனை தேடியே
நான் துவண்டு போனேன்...
துவண்டாலும் துவளாதது அன்பல்லவா!!!
உடல் நலக்குறைவினால்
உறங்கிக்கொண்டிருப்பாய் என
இதோ உனை நோக்கி விரைந்தோடிய கால்கள்...
என் குரல் கேட்டும், மறுமொழியில்லா
அவ்விருட்டு அறையில், நகரா உடலை கண்டதும்
பின்னோக்கி ஓடியதும் ஏனோ...

சிறுப்பிள்ளை எனினும்
கணித்துவிட்டதோ என்னிதயம்...
அவன் போய்விட்டான்,
யாரை பேதை போல்
அழைத்து கொண்டு ஓடுகிறாய்....

எனை அணைத்த கரங்கள்
மதுவை தழுவியதே...
உலகறியா இச்சிறு இதயம்
வேண்டாம் என கூறிய அவ்வார்த்தைகள்
அன்று உன் செவிகளில் கேட்கவில்லையே...

இன்று என் குரல் கிழிய கதறுகிறேனே
*****-kutty என என் பெயர்
உன் குரல் வழி என் செவிகளில் கேட்காதா...

நீ அருந்திய மது நீரெல்லாம்
என் விழி நீராய் வழிகின்றதே
உன் விரல்களது துடைத்திட தீண்டாதா...

எங்கோ, யாரோ மதுவினால் துவண்டாலும்
என் உள்ளம் உடைவதுண்டு,
இவர்கள் நிலை மாறாதாவென...


நானில்லாமலும் வாழக்கற்றுக்கொள்
என விட்டுச்சென்றாயோ...


உனை காண்ட உறவுகளில்
எனை தேற்றிக்கொண்டேன்...

இதோ,

உன் வார்த்தைகளாய் தேற்றும் அவ்வெளிச்சமும்
உன் அரவணைப்பாய் தழுவும் அம்மேகமும்

என்னோடு இங்கே அவ்வானமாய்!!!❤️✨
1000006565.jpg
 
விழி நீர் வடிகயில்
உன் விரல்களை தேடினேன்...

உள்ளம் உடைகயில்
உன் அணைப்பை தேடினேன்...

நீ அணைத்துறங்கிடும்
உன் தலையணை ஒரத்தில்
இரு முத்தங்கள் பதித்திடு...

அவைகள் நான் துயில
தலை கோதி விடரும்
நெற்றி முத்தங்களாகட்டும்...

தாய் மடியை நாடி ஏங்கும்
ஓர் சிறு குழந்தையாய்!!!

Hun❤️
 
Last edited:
கானல் நீரும்...1000009429.jpg
1000009427.gif காணா நதியும்...

அதோ மேக ஊர்வலம்
அதுவும் கானல் நீரோ???
இதோ வெள்ளை தேரோட்டம்
இதுவும் காணா நதியோ???


அங்கே கோடி கனாக்கள் கானலாய்...
இங்கே தேடி ததும்பும் மெல்லலைகள் நதியாய்...

அங்கே பருகிட ஏங்கும் வறண்ட நா!!!
இங்கே பகிர்ந்திட விடரும் திரண்ட நதி!!!

அங்கே நெருங்கயில் மறையும் கானல்கள்...
இங்கே வருகையை தவழும் நதிகள்...

கானல் கனாக்களை மட்டும் காணும்
அக்கண்களுக்கு இந்நதியும்
கானலாய் தோன்றிற்றோ!!!

தூர இடைவெளியும்,
கூரு போடும் நினைவலைகளும் கானல்களாகிடுமோ...


விழிகளில் மைகளிட்டவள்
கூடே திரைகளையும் சூடிக்கொண்டாயோ...
துயில் கொள்ள அவ்விமைகள் போதுமடி கண்ணே!!!
திரைகளை களைந்து இமை திறந்து காண்...
நீ காண்பது யாவும் கானல்கள் மட்டுமல்ல...
1000009430.jpg
காலை எழுகயில்
குழலினை கோர்க்கும் ஜடவளை முதல்...
இரவில் துயில்கயில்
அணைத்துறங்கும் தலையணை வரை...
சுற்றியுள்ள யாவிலும், காணும் யாவரிலும்,
கேட்கும் இசையிலும், செய்யும் பணியிலும்,
பருகும் உணவிலும், உடுக்கும் உடையிலும்,
உடனிருக்கும் நினைவுகள் கானல்களா???


கானல்களோ!!! இருக்கட்டும்...

நீ கண்ட கானல்களை யாவும்
மேகத்தில் கோர்த்து
நினைவுகள் எனும் மூச்சுக்காற்றால்
அம்மேகமும் மழையாய் பொழிய...
மலைகளில் ஓடையாய் திரண்டோடி,
காடுகளில் அருவியாய் பெருக்கெடுத்து,
வளைந்தோடும் நதியாய் நெளிந்து,
கடல்தனில் சேர்க்கிறேன்.
1000009428.gif

ஒருமுறையேனும் இந்நதியின்
ஈரத்தீண்டல்களை உணர்வாயா???
அக்கடற்கரை ஓரத்தில்
உன் பாதம் நெனைகயில்...
1000009421.gif

கானல் கனாக்களின் காணாநதி!!!
 
நீளா மூன்று வினாடிகள்...
என் குரல் வழி அவள் செவிகள்
கேட்ட அவளின் பெயரும்
அவள் குரல் வழி என் செவிகள்
கேட்ட பதிலுரையும்
மீளா மூன்று வினாடிகள்...
1000009727.jpg
 
Top