• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

ஒரு பிறையின் கிறுக்கல்கள்

‎இசையில் மட்டுமே நான்
மயங்குவேன் என்பதை
‎எப்படித்தான் அறிந்தாயோ தெரியவில்லை...
‎
‎வார்த்தைகளால் என்னிடம் பேசாமல்
‎உன் குரலில் இசையை ஒலிக்கவிட்டு
‎அதன் வழியே என்னோடு
‎நட்பைத் தொடங்கியவன் நீ!
‎
‎நீ பாடல்களை பாட
‎நான் ரசித்துக் கேட்க
‎நேரம் போவது கூடத் தெரியாமல்
‎நகர்ந்தன நம் பொழுதுகள்!
‎
‎இடையில் சில மாதங்கள்
‎எந்தத் தடயமும் இல்லாமல்
காணாமல் போனாய்...
‎
‎நாட்கள் பல கடந்தபின்
‎மீண்டும் வந்தாய்...
‎விட்டுச் சென்ற இடத்திலிருந்தே
‎மீண்டும் தொடங்கினோம்
‎நம் பயணத்தை!
‎
‎எனக்குத் தெரியாத பல
விஷயங்களை
‎எந்தச் சலிப்புமின்றி பொறுமையாகக் கற்றுத் தந்தாய்...
‎
‎அதனால் தானோ
‎என் முதல் பாடலை
‎உனக்கே சமர்ப்பித்து விட்டேன்!
‎
‎வார்த்தைகளின்றி
‎இசையால்
‎நட்பைத் தொடங்கியவன் நீ...
‎
‎எந்த எதிர்பார்ப்புமின்றி
‎என் ரசனைகளுக்குள்
இடம்பிடித்தவன் நீ...
‎
‎இன்று
‎என் நினைவுகளில் இசையாக
ஒலிக்கும்
‎உன்னை என்னவென்று
அழைப்பது...?
 
‎இந்த இடத்திற்கு நான்
‎புதியவள் தான்
‎ஆனால் சிலரின் நினைவுகளில்
‎ஏற்கெனவே அறிமுகமானவள்!
‎
‎சிலருக்கு என் வருகை புதிதாக இருக்கலாம்
‎சிலருக்கோ என் எழுத்தும் பேச்சும்
பழக்கமானதாக இருக்கலாம்
‎
‎பார்க்கும் கண்களுக்குப் புதிராகவும்
‎பழகிய மனங்களுக்குப் பரிச்சயமாகவும் இருக்கிறேன்!
‎
‎சொல்லுங்கள் பார்க்கலாம்...
‎நான் யார்?
1000321608.jpg
 
‎யாரையோ தேடி
என் இன்பாக்ஸுக்குள்
‎தவறுதலாக வந்தவன் நீ...
‎
‎"நீ தேடும் நபர் நான் இல்லை" என்று
‎மீண்டும் மீண்டும் சொல்லியும்
‎உன் சந்தேகத்தின் நிழல் மட்டும்
‎மறையவே இல்லை!
‎
‎நான் தேடும் பெண்ணும்
‎உன்னைப் போலவே ரசனையான பெயருக்குச் சொந்தக்காரி
‎என்று நீ சொல்ல...
‎
‎"நான் அவள் இல்லை" என்று
‎உன்னை விரட்டியடிப்பதிலேயே
‎நாட்கள் பல நகர்ந்தன!
‎
‎யாரோ ஒருவரைத் தேடி வந்த
உனக்கும்
‎யாரென்றே தெரியாமல்
‎உன்னை விரட்டிய எனக்கும்
‎இடையில் இப்படியொரு பந்தம் உருவாகும் என்று
‎அன்று நாம்
‎எதிர்பார்த்திருப்போமா?
‎
‎எப்படித் தொடங்கியது என்றே புரியவில்லை
‎ஆனால் இன்று பிரிக்க முடியாத பந்தமாகி விட்டாய்!
‎
‎உனக்கும் எனக்கும்
‎இடையில் இப்படியொரு அழகான பந்தத்தை
‎எழுதி வைத்தது யார்?
 
கவிதையே தெரியுமா?
‎
‎கவிதை தெரியுமா? என்று
‎கேட்டால்
‎தெரியாது என்பேன்
தயக்கமில்லாமல்!
‎
‎ஆனால்
‎கவிதை எழுதச் சொன்னால் மட்டும்
‎கற்பனை குதிரை ஓடும் கட்டுப்பாடில்லாமல்!
‎
‎ஒரு வரி எழுதிவிட்டு ரசித்துப்
பார்த்தால்
‎அதற்கே பத்து அர்த்தங்கள்
தோன்றும்!
‎
‎வார்த்தைகள் வரவில்லை என்றால்
‎நிலா மழை தென்றல் எனச்
‎சேர்த்து விடுவேன்!
‎
‎கவிதை புரியவில்லை என்றால்
‎மீண்டும் ஒருமுறை படித்துப்
பாருங்கள்...
‎
‎இரண்டாவது முறையும்
புரியாவிட்டால்
‎அதுதான் என் கவிதையின்
தனித்துவம் என்பேன்!
 
‎நீ பாடல்களை ஒலிக்கவிடுகிறாய்
நான் அவற்றில் என்னைத் தொலைக்கிறேன்...
‎
‎நமக்குள் வார்த்தைகள் பரிமாறப்படவில்லை என்றாலும் பாடல்கள் மட்டும் அழகாகப் பேசிக்கொண்டிருக்கின்றன!
‎
‎சிலருக்கு அறிமுகம் தேவையில்லை...
‎ஒத்த இசை ரசனையே அழகான அடையாளமாகிவிடுகிறது!
 
தற்செயலாய் நிகழ்ந்த அறிமுகம்
‎என் மனதில் அவனைப் பற்றிய
‎எந்த எதிர்பார்ப்பும் இல்லை...
‎
‎ஆனால் ஏனோ
‎அவன் பேச்சில்
‎என் கவனம் அவன் பக்கம்
திரும்பியது...
‎
‎அவன் பேசிக்கொண்டே இருக்க
‎நான் அந்த வார்த்தைகளை விட
‎அவன் பேச்சின் ரசனையை
‎அதிகம் ரசித்தேன்...
‎
‎நான் ரசிப்பதைப் பார்த்து
‎அவன் இன்னும் பேசினான்...
‎
‎அவன் பேச பேச
‎நான் இன்னும் ரசித்து
‎சிரித்தேன்...
‎
‎இப்படியே அவன் பேச்சும்
‎என் சிரிப்பும் ஒன்றுக்கொன்று
‎துணையாகி நேரத்தைக் கடத்தியது...
‎
‎சிலர் நம் வாழ்க்கைக்குள்
‎எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் வருகிறார்கள்
‎
‎காரணம் இல்லாமல் சிரிக்க வைக்கிறார்கள்
‎அனுமதி இல்லாமல் மனதிற்குள் இடம்பிடிக்கிறார்கள்...
‎
‎அவனுக்கும் எனக்கும் என்ன உறவு என்று தெரியவில்லை...
‎ஆனால் ஒன்று மட்டும் புரிகிறது...
‎
‎அவன் பேசும்போது என் மனம் சிரிக்கிறது
‎அவன் இல்லாதபோதும் அந்தச்
சிரிப்பு
‎ஏதோ ஒரு நினைவாக என்னை தொடர்கிறது...!
 
Back
Top