Hangova
Favoured Frenzy
Kavidhai superயாரையோ தேடி
என் இன்பாக்ஸுக்குள்
தவறுதலாக வந்தவன் நீ...
"நீ தேடும் நபர் நான் இல்லை" என்று
மீண்டும் மீண்டும் சொல்லியும்
உன் சந்தேகத்தின் நிழல் மட்டும்
மறையவே இல்லை!
நான் தேடும் பெண்ணும்
உன்னைப் போலவே ரசனையான பெயருக்குச் சொந்தக்காரி
என்று நீ சொல்ல...
"நான் அவள் இல்லை" என்று
உன்னை விரட்டியடிப்பதிலேயே
நாட்கள் பல நகர்ந்தன!
யாரோ ஒருவரைத் தேடி வந்த
உனக்கும்
யாரென்றே தெரியாமல்
உன்னை விரட்டிய எனக்கும்
இடையில் இப்படியொரு பந்தம் உருவாகும் என்று
அன்று நாம்
எதிர்பார்த்திருப்போமா?
எப்படித் தொடங்கியது என்றே புரியவில்லை
ஆனால் இன்று பிரிக்க முடியாத பந்தமாகி விட்டாய்!
உனக்கும் எனக்கும்
இடையில் இப்படியொரு அழகான பந்தத்தை
எழுதி வைத்தது யார்?
Ana adha vida indha same technique enkitayum use pannanga
