• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

ஒரு பிறையின் கிறுக்கல்கள்

‎யாரையோ தேடி
என் இன்பாக்ஸுக்குள்
‎தவறுதலாக வந்தவன் நீ...
‎
‎"நீ தேடும் நபர் நான் இல்லை" என்று
‎மீண்டும் மீண்டும் சொல்லியும்
‎உன் சந்தேகத்தின் நிழல் மட்டும்
‎மறையவே இல்லை!
‎
‎நான் தேடும் பெண்ணும்
‎உன்னைப் போலவே ரசனையான பெயருக்குச் சொந்தக்காரி
‎என்று நீ சொல்ல...
‎
‎"நான் அவள் இல்லை" என்று
‎உன்னை விரட்டியடிப்பதிலேயே
‎நாட்கள் பல நகர்ந்தன!
‎
‎யாரோ ஒருவரைத் தேடி வந்த
உனக்கும்
‎யாரென்றே தெரியாமல்
‎உன்னை விரட்டிய எனக்கும்
‎இடையில் இப்படியொரு பந்தம் உருவாகும் என்று
‎அன்று நாம்
‎எதிர்பார்த்திருப்போமா?
‎
‎எப்படித் தொடங்கியது என்றே புரியவில்லை
‎ஆனால் இன்று பிரிக்க முடியாத பந்தமாகி விட்டாய்!
‎
‎உனக்கும் எனக்கும்
‎இடையில் இப்படியொரு அழகான பந்தத்தை
‎எழுதி வைத்தது யார்?
Kavidhai super
Ana adha vida indha same technique enkitayum use pannanga
:map:
 
நிலவின் மீது காதல்
‎
‎எனக்குத் தெரியவில்லை
‎எந்த நாளில் தொடங்கியது என்று!
‎
‎ஒரு பின்மாலை நேரத்தில்
‎ஜன்னல் வழியே வானத்தைப் பார்த்தபோது
‎மேகங்களின் நடுவே
‎மெதுவாகத் தலைகாட்டிய நிலவு...
‎
‎அன்றுதான் முதன்முதலாக
‎அதன் அழகை ரசித்தேனா?
‎
‎அல்லது அதற்கு முன்பே
‎என் மனம் நிலவிடம் தொலைந்திருந்ததா?
‎எனக்கே தெரியவில்லை...
‎
‎ஆனால் அன்றிலிருந்து
‎என் இரவுகளுக்கு ஒரு பழக்கம் வந்துவிட்டது!
‎
‎வீட்டின் மொட்டைமாடியில்
‎அமர்ந்திருக்கும் நேரங்களில்
‎என் கண்கள் மட்டும்
‎வானத்தின்
‎ஏதோ ஒரு மூலையில்
‎நிலவைத் தேடிக்கொண்டிருக்கும்
‎
‎நிலவே...
‎உன்னைப் பார்க்கும்போதெல்லாம்
‎எனக்குள் ஏதோ ஒரு அமைதி பிறக்கிறது...
‎
‎நாள் முழுவதும்
‎மனதில் சுமந்து திரிந்த
‎சின்னச் சின்ன கவலைகள்கூட
‎உன் ஒளியில் கரைந்து போவது போல...
‎
‎உன்னிடம் பேசுவதற்காக
‎நான் கவிதை எழுதக் கற்றுக்கொள்ளவில்லை
‎
‎ஆனால்
‎உன்னைப் பார்த்த பிறகுதான்
‎என் மௌனங்களுக்குக்கூட
‎அழகான வார்த்தைகள் இருப்பதை
‎உணர்ந்துகொண்டேன்!
‎
‎சில இரவுகளில்
‎மேகங்களுக்குள் மறைந்து கொள்கிறாய்
‎
‎அப்போது
‎வானத்தைப் பார்த்தபடியே
‎என் மனம் கேட்கிறது
‎
‎“இன்று மட்டும் ஏன்
‎என்னைப் பார்க்க வரவில்லை?”
‎
‎மறுநாள்
‎மீண்டும் உன்னைப் பார்க்கும்போது
‎நேற்று காணாமல் போன
‎என் மகிழ்ச்சியை
‎மீண்டும் கண்டுபிடித்துவிட்டதைப்
போல
‎மனம் குழந்தையாகிவிடுகிறது!
‎
‎பௌர்ணமி இரவுகளில்
‎உன்னைப் பார்க்கும்போது
‎வானமே
‎ஒரு வெள்ளை ஓவியமாகத்
தெரிகிறது...
‎
‎நட்சத்திரங்கள்
‎உன்னைச் சுற்றி மின்னும்
‎சின்னச் சின்ன அலங்காரங்களாக...
‎
‎மேகங்கள்
‎உன் அழகைக் கண்டு
‎மெதுவாக விலகிச் செல்லும்
‎வெட்கம் கொண்ட தோழிகளாக...
‎
‎அத்தனை அழகாக
‎உன்னை ரசித்துக்கொண்டிருக்கும் என்னிடம்
‎யாராவது கேட்டால்...
‎
‎“நிலவு உனக்கு அவ்வளவு பிடிக்குமா?”
‎என்ன பதில் சொல்வேன்?
‎
‎எல்லோருக்கும் நிலவு
‎இரவு வானத்தில் தெரியும்
‎ஒரு அழகான பொருளாக இருக்கலாம்...
‎
‎ஆனால் எனக்கு மட்டும்
‎அது என் தனிமையின் தோழி...
‎
‎என் சொல்லப்படாத எண்ணங்களின்
‎மௌனமான சாட்சி...
‎
‎நான் யாரிடமும் பகிராத
‎சில ரகசியங்களின்
‎நம்பிக்கையான முகவரி!
‎
‎நிலவே
‎உன்னைத் தொட்டுப் பார்க்க முடியாது
‎என்று எனக்குத் தெரியும்...
‎
‎உன்னுடன் சேர்ந்து
‎வானத்தில் நடக்க முடியாது
‎என்றும் தெரியும்...
‎
‎ஆனாலும்
‎என் பார்வைகளால்
‎உன்னைத் தொட்டுக்கொள்கிறேன்...
‎
‎என் கற்பனைகளால்
‎உன்னுடன் பேசிக்கொள்கிறேன்...
‎
‎என் இரவுகளின் மௌனத்தில்
‎உன்னுடன் சேர்ந்து
‎ஒரு அழகான உலகத்தை
‎உருவாக்கிக்கொள்கிறேன்!
‎
‎உன் அழகில்
‎எந்தக் குறையும் நான்
‎கண்டதில்லை...
‎
‎தேயும் நாட்களிலும்
‎வளரும் நாட்களிலும்
‎உன்னை ரசிப்பதில்
‎என் மனம் ஒருபோதும்
மாறுவதில்லை...
‎
‎ஏனெனில்
‎உன் முழுமையை மட்டும்
‎நான் காதலிக்கவில்லை...
‎
‎உன் மௌனத்தையும்
‎உன் மறைவையும்
‎உன் தேய்பிறையையும் கூட
‎என் ரசனையின் ஒரு பகுதியாகவே
‎ஏற்றுக்கொண்டிருக்கிறேன்!
‎
‎என் காதல்
‎உன்னை அடைவதற்கான
ஆசையல்ல...
‎
‎உன்னைச்
சொந்தமாக்கிக்கொள்ளும்
‎பேராசையும் அல்ல...
‎
‎ஒவ்வொரு இரவும்
‎உன்னைப் பார்த்து ரசித்தபடி
‎என் மனதின் அழகான பக்கங்களை
‎நானே கண்டுகொள்வதுதான்!
‎
‎நிலவே
‎நீ எல்லோருக்கும்
‎வானத்தில் ஒரு நிலவு...
‎
‎எனக்கோ...
‎என் இரவுகளின் அழகான ரசனை
‎நீ...
‎என் மௌனங்களின் இனிமையான கவிதை நீ...
‎
‎தொலைவில் இருந்தாலும்
‎என்றும் என் மனதிற்கு
‎மிக நெருக்கமான அழகான
காதல் ‎நீ!!
 
‎
‎என்ன சொல்ல
‎எப்படிச் சொல்ல
‎எந்த வார்த்தையில் தொடங்க...
‎எதுவுமே தெரியவில்லை!
‎
‎கேள்விகள் மட்டும்
‎என் மனதிற்குள்
‎ஓயாமல் ஒலித்துக் கொண்டிருக்கின்றன...
‎
‎ஏன்...? ஏன்...? ஏன்...?
‎
‎ஒரு வார்த்தை கூடச் சொல்லாமல்
‎எப்படி உன்னால் காணாமல்
‎போக முடிந்தது?
‎
‎நான் உனக்கு அவ்வளவு அந்நியமா...
‎இல்லை அவ்வளவு அற்பமா?
‎
‎என் ஞாபகம்
‎ஒரு நிமிடமாவது உனக்கு வரவில்லையா?
‎
‎நம் உரையாடல்கள்
‎நம் சின்னச் சின்ன சிரிப்புகள்
‎எதுவுமே உன்னைத் திரும்பிப் பார்க்க
‎வைத்திருக்கவில்லையா?
‎
‎தொடர்புகளை அழித்துவிட்டு
‎தொலைந்து போவது
‎உனக்கு எளிதாக இருந்திருக்கலாம்...
‎
‎ஆனால்
‎உன் பெயரைத் தேடிப் பழகிய
‎என் விரல்கள் இன்னும்
‎அந்தப் பழக்கத்தை மறக்கவில்லை!
‎
‎ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாமே...
‎இனி பேச முடியாது என்று!
‎
‎ஒரு விடை கொடுத்திருக்கலாமே...
‎நம் நட்பு இத்துடன் முடிகிறது என்று!
‎
‎எதற்காக என்னோடு பழகினாய்?
‎எதற்காக இவ்வளவு நெருக்கமானாய்?
‎
‎பிரிந்து போகத்தான் என்றால்
‎கொஞ்சம் தூரத்திலேயே
‎நின்றிருக்கலாமே...
‎
‎இப்போது
‎உன்னைத் தேடுவதற்குக் கூட
‎எந்த வழியும் இல்லை...
‎
‎நீ விட்டுச் சென்ற
‎நினைவுகளிடம் மட்டும்
‎பேசிக்கொண்டிருக்கிறேன்
‎
‎ஆனால்...
‎ஒருநாள் மீண்டும் வருவாய் என்ற
‎நம்பிக்கை மட்டும்
‎இன்னும் என் மனதில் உயிரோடு இருக்கிறது!
‎
‎அன்று உன்னைப் பார்த்ததும்
‎என் மனம் பழையபடி மகிழுமா?
‎
‎இல்லை...
‎நீ விட்டுச் சென்ற காயங்களை
‎நினைத்து வலிக்குமா
‎என்று எனக்குத் தெரியவில்லை...
‎
‎நீ திரும்பி வருவாய் என்ற நம்பிக்கை இருக்கிறது...
‎ஆனால் அன்று
‎உன்னோடு பேசுவேனா என்ற
நம்பிக்கை ‎எனக்கில்லை...!
‎
‎MISS U...
 
அலைகளின் மொழி புரிந்ததாலோ என்னவோ
‎கடலோடு இத்தனை காதல்
‎எனக்கு...
‎கரை தொட்டுச் செல்லும் ஒவ்வொரு அலையிலும்
தொலைத்துவிடுகிறேன்
‎நான் என்னை...
 
‎
‎நீ இல்லாதபோதுதான்
‎திரும்பிப் பார்க்கத் தோன்றுகிறது...
‎
‎நம்முடைய இந்த ஒரு வருடப் பழக்கங்களை
‎ஒவ்வொன்றாய் நினைத்துப் பார்க்கிறேன்!
‎
‎நீ அருகில் இருந்தபோது
‎இவ்வளவு அழகான நினைவுகளை
‎நாம் சேர்த்துக் கொண்டிருக்கிறோம்
‎என்பதுகூட
எனக்குத் தெரியவில்லை...
‎
‎இப்போது
‎மனதின் ஒவ்வொரு மூலையிலும்
‎நீ விட்டுச் சென்ற நினைவுகள்
‎மெல்ல மெல்ல உலா வருகின்றன!
‎
‎நாம் பேசியது...
‎காரணமில்லாமல் சிரித்தது...
‎சின்னச் சின்ன சண்டைகள் போட்டது...
‎
‎மீண்டும் சமாதானமானது...
‎நான் கோபப்பட்டபோதெல்லாம்
‎என் கோபத்தையும் பொறுத்துக்கொண்டு
‎என்னிடம் பேசியது...
‎
‎எல்லாமே
‎நேற்று நடந்ததைப் போல
‎கண்முன்னே வந்து நிற்கிறது!
‎
‎ஆனால்...
‎இனி எப்படி?
‎என்ற ஒரு கேள்வி மட்டும்
‎மனதிற்குள் எழும்போது
‎அதற்கான பதிலைத் தேடக்கூட
‎என்னால் முடியவில்லை!
‎
‎நான் இங்கே வந்த புதிதில்
‎எதுவுமே தெரியாமல்
‎விழித்துக்கொண்டிருந்த நாட்கள்...
‎
‎இங்கே இப்படித்தான் இருக்க
வேண்டும்
‎இப்படித்தான் பழக வேண்டும்
‎இப்படித்தான் ஒவ்வொன்றையும்
‎கடந்து வர வேண்டும் என்று
‎எனக்கு புரிய வைத்தது நீ!

‎அன்று
‎நீ சொல்லிக் கொடுத்ததெல்லாம்
‎சாதாரணமான
வார்த்தைகளாகத்தான் இருந்தது...
‎
‎இன்று
‎நீ என்னோடு இல்லாதபோதும்
‎அந்த வார்த்தைகள் ஒவ்வொன்றும்
‎எனக்குத் துணையாகப் பயணிக்கின்றன!
‎
‎எத்தனையோ படங்கள் பார்த்திருந்தாலும்
‎"சிறை" திரைப்படம்
மறக்க முடியாத ஒரு நினைவாக
மாறியது உன்னால்!
‎
‎அந்தப் படத்தின் கதையைவிட
‎அதைப் பற்றிய
நம் உரையாடல்கள்தான்
‎இன்று மனதில் அதிகம் ஓடுகின்றன...
‎
‎இப்படித்தான்
‎எத்தனையோ சின்னச் சின்ன விஷயங்கள்
‎உன்னோடு சேர்ந்து
‎என் நினைவுகளுக்குள் பின்னிப் பிணைந்திருக்கின்றன!
‎
‎இவ்வளவு நாட்கள்
‎எனக்குத் தெரியாமல் நீ
‎என் அன்றாட வாழ்க்கைக்குள்
‎ஒரு அழகான பழக்கமாக மாறிய
காலம்!
‎
‎இன்று அந்தப் பழக்கம் இல்லை...
‎ஆனால் பழகிய மனம் மட்டும்
‎இன்னும் உன்னைத் தேடிக்கொண்டிருக்கிறது!
‎
‎சிலர் நம் வாழ்க்கையில்
‎நீண்ட காலம் இருப்பதில்லை...
‎
‎ஆனால் அவர்கள் பழக்கப்படுத்திய
‎அழகான நினைவுகள் மட்டும்
‎நம்மை விட்டு விலகுவதே இல்லை!
‎
‎ஒருநாள் நீ திரும்பி வந்தாலும்
‎வராமல் போனாலும்...
‎
‎என் வாழ்க்கையின் அழகான பக்கங்களில்
‎நீயும் ஒருவனாய் இருப்பாய்!!!

‎
 
‎சில நினைவுகள்
‎கடந்து போன காலத்தின் பரிசுகள்...
‎மறந்துவிட்டதாக நினைக்கும் நேரங்களில் கூட
‎மனதின் ஓரத்தில்
‎மௌனமாகப் பூத்துக்கொண்டே இருக்கும்!!
 
Back
Top