Hangova
Wellknown Ace
புத்தகங்கள் தான் அவள் வீடு
சில புலவர்களும் அதில் உண்டு
வெற்று பேச்சில் வேல் வீசுவாள்
கொஞ்சம் மீறினால் களங்கம் என்பாள்
பெருமை தான் கொஞ்சம்
போதும் அளவுக்கு பெண்மை மீதம்
திகட்டாத திமிர் அவளின் அழகு
இன்னிசை அவளின் காதலன்
இயல்பாக பேசினால் இளகியும் போவாள்
இதயம் கோரினால் இடம் உண்டு என்பாள்
பல வண்ணங்களில் தினம் வலம் வருவாள்
மின்னல்!
சில புலவர்களும் அதில் உண்டு
வெற்று பேச்சில் வேல் வீசுவாள்
கொஞ்சம் மீறினால் களங்கம் என்பாள்
பெருமை தான் கொஞ்சம்
போதும் அளவுக்கு பெண்மை மீதம்
திகட்டாத திமிர் அவளின் அழகு
இன்னிசை அவளின் காதலன்
இயல்பாக பேசினால் இளகியும் போவாள்
இதயம் கோரினால் இடம் உண்டு என்பாள்
பல வண்ணங்களில் தினம் வலம் வருவாள்
மின்னல்!







