


இரத்தம் சிந்தாமல்
சிவக்கின்றேன்??
வெட்கம்!!



நீ குளிக்கையில்
நானும் கொஞ்சம்
நனைவேன் - வெட்கம் !!



வெளிச்சத்தை அவிழ்த்து
வெட்கப் போர்வை
போர்த்திக் கொண்டது
நிலா - மேகம்



நாணம் அறியா
நானும் நாணுகிறேன்
நீ முத்தம் சிந்துகையில் !!



உன் பூமுகம் கண்டதும்
இமை மூடி
வெட்கப் போர்வை
போர்த்திக் கொண்டது
என் கண்கள் !!



ஆடை அவிழ்ந்ததும்
வெட்கம் உடுத்திக்
கொண்டாள் !!