• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

♥️அவன் ♥️

விழிகளில் விடியலை ஒளித்து வைத்தான்,

விரல் நுனியில் என் விதியை மாற்றி வைத்தான்.

வார்த்தைகள் ஏதுமின்றி மௌனத்தால் பேசியே,

வாழும் உலகத்தை ஒரு நொடியில் திருடிவிட்டான்!

யாரிவன் மாயவன்?

நெஞ்சில் விழுந்த ஒற்றைப் பார்வைக்கே,

ஆயிரம் ஜென்மத்தின் தாகம் தீர்த்து வைத்தவன்.

மழையெனப் பெய்யாமல் தூறலாய் நனைப்பவன்,

சுவாசிக்கும் காற்றில் எல்லாம் சுவடு பதிக்கிறான்.

அவன் சிரித்தால் இதயம் திசை மாறுகிறது,

அவன் விலகினால் மரணம் உயிர் கேட்கிறது.

கனவா நிஜமா என்று பிரித்தறிய முடியாமல்,

என்னுள் என்னையே தொலைக்க வைத்த

என் பேரன்பின் ஒற்றை முகவரி இவன்
!

1000203161.jpg​
 
Wow
Just wow!
How can you write so beautifully!
"Ival thaai mozhi pesidum bodhu andha aangilam yengudhu paaru" Dedicated to you!
Comparisons, the words you choose!
Everything sits gracefully
 
என் மௌனத்தின் மொழியும் அவனே,
என் நினைவின் முதல் வரியும் அவனே…

நான் தேடாத நேரங்களிலும்
என்னைத் தேடி வரும் நினைவு அவன்;
நான் மறக்க நினைக்கும் தருணங்களிலும்
மறக்க முடியாத காரணமும் அவன்…

என் இதயத்தில் எழுதப்படாத
ஒரு அழகிய அத்தியாயம் அவன்;
முடிவில்லாமல் தொடரும்
என் மௌனத்தின் அர்த்தம் அவன்…… ❤️

View attachment 431891
சில மனிதர்கள் நம் நினைவுகளில் அவ்வளவு ஆழமாகப் பதிந்துவிடுகிறார்கள்; நம் மௌனம் கூட அவர்களின் பெயரையே பேசுகிறது.
எவ்வளவு மறக்க முயன்றாலும், இதயம் அமைதியாக அவர்களின் அத்தியாயத்தை உயிரோடு வைத்திருக்கிறது.
 
யாரோ இவன்…
என் விழிகள் தேடும் முகமா,
என் மனம் தேடும் உறவா?

பேசாமல் பேசும் அவன் பார்வையில்,
ஆயிரம் கவிதைகள் பிறக்கின்றன…
அவன் அருகில் இல்லாத நொடிகளும்,
அவனைப் பற்றியே நினைக்க வைக்கின்றன.

யாரென்று தெரியவில்லை…
ஆனால் ஏனோ,
என் இதயம் அவனை
“என்னவன்” என்று அழைக்கிறது… ❤️

1000205698.jpg
​
 
@PRETTYCUTIE அந்த அதிர்ஷ்டசாலி யார்? மறக்காமல் சொல்லுங்க,
அப்பறம் நாங்க நம்பிக்கை வைப்பதை நிறுத்திக்கலாம்.:nerdy:
 
@PRETTYCUTIE அந்த அதிர்ஷ்டசாலி யார்? மறக்காமல் சொல்லுங்க,
அப்பறம் நாங்க நம்பிக்கை வைப்பதை நிறுத்திக்கலாம்.:nerdy:
Yarunu therinja direct ah avanuke msg panni irupene :map:
 
Yarunu therinja direct ah avanuke msg panni irupene :map:
நான் அவனைத் தெரியும். தயங்காமல் கேளுங்கள். உங்களுக்கு உதவ நான் தயாராக இருக்கிறேன்.:tso:
 
Top