• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

விவசாயம் காப்போம்

Horsepower

Favoured Frenzy
Chat Pro User
நான் ஒரு ஹோட்டலுக்கு சென்று
சாப்பிட்டேன்.. சாப்பிட்டு முடித்தப் பிறகு
பணம் கொடுக்கும் போது அந்த
ஹோட்டல் உரிமையாளரிடம் ஒரு
கோரிக்கையை முன் வைத்தேன்..

ஐயா, உங்கள் ஹோட்டலின்
நான்கு சுவரிலும் சிக்கன் வறுவல் படமும், வறுத்த மீன் படமும், இட்லி,தோசை,பூரி,வடை மற்றும்
இலையில் சோறு,கறி வைத்தார் போல்
புகைப்படங்களை ஒட்டியுள்ளீர்களே..

இவற்றை எல்லாம் நீக்கிவிட்டு
மீனவர்கள் மீன் பிடிப்பதைப் போன்ற
படங்களை வையுங்கள்
மீன் உண்பவர்கள் அந்த மீனவனை
நினைத்து பார்த்து உண்ணட்டும்..

விவசாயிகளின் கஷ்டத்தை உணர்த்தும்
படியான புகைப்படங்களை வையுங்கள்
உணவு உண்பவர்கள் அந்த
விவசாயிகளை நினைத்துப் பார்த்து
உண்ணட்டும்..

பால் கரப்பதை போன்று ஒரு மாட்டின்
புகைப்படத்தை ஒட்டி,
"இரண்டு வயதுவரை மட்டும் தான்
நாம் அனைவரும் தாய்ப்பால் குடித்தோம்
அதற்கு பிறகு வாழ்நாள் முழுவதும்
நாம் குடிக்கும் டீயிலும்,காபியிலும்
இருப்பதெல்லாம் இந்த மாடுகளின்
பால் தான் "
என்று எழுதிப் போடுங்கள்..
டீ,காபி குடிப்பவர்கள் அந்த மாடுகளை
நினைத்துப் பார்த்து குடிக்கட்டும்

மேலும் "நீங்கள் இந்துவோ,கிருஸ்த்தவரோ,முஸ்லீமோ
நீங்கள் உண்ணும் தினசரி உணவை
எந்தக் கடவுளும் உங்களுக்கு தரவில்லை
நீங்கள் உண்ணும் உணவு அது
விவசாயிகளின் உழைப்பால் வந்தது"

என்று அனைவரின் பார்வைப்படும் படி
எழுதிப் போடுங்கள். ஏனென்றால்
விவசாயிகளைக் காப்பாற்ற வேண்டிய
கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்..

என்றக் கோரிக்கைகளை எல்லாம்
நான் வைத்தபோது உடனடியாக
அதை ஏற்றுகொண்டு
இன்னும் ஒரு வாரத்தில் இந்தப் புகைப்படங்களை எல்லாம் நீக்கிவிட்டு,
நீங்கள் சொன்னதைப் போன்று
மாற்றி அமைக்கிறேன் என்று வாக்கு
தந்துள்ளார் அந்த நல்ல மனிதர்..

இதையே அனைத்து உணவகத்திலும்
அதன் உரிமையாளர்கள் செய்தால்
விவசாயத்தின் தேவை அனைவரின்
மனதிலும் ஆணியைப் போல பதியும்..
 

Attachments

  • Dicm8.jpg
    Dicm8.jpg
    94.8 KB · Views: 0
நான் ஒரு ஹோட்டலுக்கு சென்று
சாப்பிட்டேன்.. சாப்பிட்டு முடித்தப் பிறகு
பணம் கொடுக்கும் போது அந்த
ஹோட்டல் உரிமையாளரிடம் ஒரு
கோரிக்கையை முன் வைத்தேன்..

ஐயா, உங்கள் ஹோட்டலின்
நான்கு சுவரிலும் சிக்கன் வறுவல் படமும், வறுத்த மீன் படமும், இட்லி,தோசை,பூரி,வடை மற்றும்
இலையில் சோறு,கறி வைத்தார் போல்
புகைப்படங்களை ஒட்டியுள்ளீர்களே..

இவற்றை எல்லாம் நீக்கிவிட்டு
மீனவர்கள் மீன் பிடிப்பதைப் போன்ற
படங்களை வையுங்கள்
மீன் உண்பவர்கள் அந்த மீனவனை
நினைத்து பார்த்து உண்ணட்டும்..

விவசாயிகளின் கஷ்டத்தை உணர்த்தும்
படியான புகைப்படங்களை வையுங்கள்
உணவு உண்பவர்கள் அந்த
விவசாயிகளை நினைத்துப் பார்த்து
உண்ணட்டும்..

பால் கரப்பதை போன்று ஒரு மாட்டின்
புகைப்படத்தை ஒட்டி,
"இரண்டு வயதுவரை மட்டும் தான்
நாம் அனைவரும் தாய்ப்பால் குடித்தோம்
அதற்கு பிறகு வாழ்நாள் முழுவதும்
நாம் குடிக்கும் டீயிலும்,காபியிலும்
இருப்பதெல்லாம் இந்த மாடுகளின்
பால் தான் "
என்று எழுதிப் போடுங்கள்..
டீ,காபி குடிப்பவர்கள் அந்த மாடுகளை
நினைத்துப் பார்த்து குடிக்கட்டும்

மேலும் "நீங்கள் இந்துவோ,கிருஸ்த்தவரோ,முஸ்லீமோ
நீங்கள் உண்ணும் தினசரி உணவை
எந்தக் கடவுளும் உங்களுக்கு தரவில்லை
நீங்கள் உண்ணும் உணவு அது
விவசாயிகளின் உழைப்பால் வந்தது"

என்று அனைவரின் பார்வைப்படும் படி
எழுதிப் போடுங்கள். ஏனென்றால்
விவசாயிகளைக் காப்பாற்ற வேண்டிய
கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்..

என்றக் கோரிக்கைகளை எல்லாம்
நான் வைத்தபோது உடனடியாக
அதை ஏற்றுகொண்டு
இன்னும் ஒரு வாரத்தில் இந்தப் புகைப்படங்களை எல்லாம் நீக்கிவிட்டு,
நீங்கள் சொன்னதைப் போன்று
மாற்றி அமைக்கிறேன் என்று வாக்கு
தந்துள்ளார் அந்த நல்ல மனிதர்..

இதையே அனைத்து உணவகத்திலும்
அதன் உரிமையாளர்கள் செய்தால்
விவசாயத்தின் தேவை அனைவரின்
மனதிலும் ஆணியைப் போல பதியும்..
Best
 
Top