• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

ஓரப்பார்வை

Baron_Smith

Active Ranker
பனி விழும் காலத்தில்… ஓர் அழகான காலை வேளையில்… ஆதவன் தன் செங்கதிர்களால் பனித்துளிகளைக் கரைய வைக்க… அதை கண்ட பறவைகள் இன்பமாய் பருக எண்ணி, கூட்டமாய் ஆர்ப்பரித்துக்கொண்டு, இனிய ராகங்களுடன் பாடிச் செல்ல… இனிமையாய் என் கண்கள் திறக்க… என் கால்களோ என்னை வீட்டை விட்டு வெளியே கொண்டு வர… என் கண்கள் உன்னை நோக்க… அக்கணம் இரு பட்டாம்பூச்சிகள் ஊடாடி என்னைச் சுற்றி வர… என் இதயம் ஏங்கி மெதுவாய் துடிக்க… என் மனமோ வாடித் தவிக்க… அக்கணம் உன் ஓரப் பார்வை என் மேல் பாய… வெற்றுடலுக்குள் உயிராய் உட்புகுந்து… நின்றுபோன என் இதயத்தைத் துடிக்க வைத்தாய்…
 
பனித்துளிகளை ஆதவன் கரைத்தது போல,
உன் வரிகள் என் மனதை மெதுவாய் நனைத்துவிட்டன…

நீ தேடியது ஒரு பார்வைதான்,
ஆனால் அந்த ஓரப் பார்வைக்குள்
இத்தனை உயிர் இருந்ததென்று
இப்போது தான் புரிகிறது…

நின்றுபோன இதயம் துடிக்க வைத்தது பார்வையல்ல,
அந்தப் பார்வைக்கு பின்னால் இருந்த
மௌனமான நேசம்தான்… ❤️
 
பனித்துளிகளை ஆதவன் கரைத்தது போல,
உன் வரிகள் என் மனதை மெதுவாய் நனைத்துவிட்டன…

நீ தேடியது ஒரு பார்வைதான்,
ஆனால் அந்த ஓரப் பார்வைக்குள்
இத்தனை உயிர் இருந்ததென்று
இப்போது தான் புரிகிறது…

நின்றுபோன இதயம் துடிக்க வைத்தது பார்வையல்ல,
அந்தப் பார்வைக்கு பின்னால் இருந்த
மௌனமான நேசம்தான்… ❤️
தங்கள் கவி திறன் என்னை மெய் சிலிர்க்க வைக்கின்றது.. எனக்கு பதில் கவிதை எழுத வார்த்தகைகள் இன்றி தவிக்கிறேன்..
 
Top