• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

என் ஆனந்தம் நீயடி!

Krish_Kishore

Wellknown Ace
விவசாயியின் கண்களுக்கு மழை ஆனந்தம்,
பாலைவனத்தின் கண்களுக்குத் தண்ணீர் ஆனந்தம்,
பசியால் துடிப்பவனின் கண்களுக்கு உணவு ஆனந்தம்,
நோயாளியின் கண்களுக்கு நல்ல மருந்து ஆனந்தம்,
ஏழையின் கண்களுக்குக் காசு ஆனந்தம்,
என் கண்களுக்கு என் வானவில் என்றும் நீயே ஆனந்தமடி!
 
என் விழிகள் தேடும் வெளிச்சம்,

என் இதயம் சுமக்கும் ரகசியம்,

என் மௌனம் பேசும் மொழி,

என் மனம் தொலைந்துபோகும் உலகம்,

என் வாழ்வில் வந்த வரம்,

என் இதயம் கண்ட ஆனந்தம்,

அத்தனையும் நீயே..!!!!
​
 
என் விரல் வருடும் காவியம்,
என் இரவை நனைக்கும் நிலவு,
என் நாவில் நடமாடும் பெயர்,
என் தனிமை நீக்கும் இசை,
என் தோள் சாயும் தேவதை,
என் உயிரை இணைக்கும் பாசம்,
அழகிய பெண்ணே, அத்தனையும் நீயே..!!
 
Top