Baron_Smith
Favoured Frenzy
தேவதை போன்ற அழகிய முகம்...
என்றும் என் மனக்கண்ணில் பதிந்து விட...
நிலா உன்னைக் கண்டு பொறாமை கொள்ளும் வெண்ணிறப் பேரழகு...
உந்தன் வெளிச்சம் பட்டு என் இருள் சூழ்ந்த வாழ்க்கை ஒளிர...
மின்னல் அடிக்கும் இரு கண்கள்...
என் மீது மின்சாரம் பாய...
அதனை மூடி மறைக்க முயலும் மேகம் போன்ற இமைகள்...
மீண்டும் மின்சாரம் தாக்கும் என நான் ஏங்க...
எரிமலைக் காற்று சூடா இல்லை உன் மூச்சுக்காற்று சூடா என வினவும் வெப்பம்...
உன் சூட்டினில் உறைந்து போன என் தேகம் மறுமலர்ச்சி அடைய...
அதனை அழகாய் வெளிக்கொணரும் இரு துவாரங்கள் கொண்ட உன் மூக்கு...
கன்னியாகுமரி அம்மனின் மூக்குத்தி உனக்கும் பொருந்தும் என எண்ண...
வில் போன்ற அழகிய அமைப்புடைய உன் இதழ்களில் இருந்து மிகவும் கூர்மையான அம்பு போல் உன் நாக்கு...
உன் இதழும் நாவும் ஒன்றுசேர ஆடும் நாட்டியத்தைக் கண்டு ரசிக்க...
அவ்விரண்டும் சேர்ந்து தேன் போன்ற ஒலி எழுப்ப...
அதனை என் செவியில் கேட்டு மகிழ...
அருவி போல் உன் கார்குழல்...
உந்தன் அழகிய சிற்பமாய் செதுக்கிய முதுகினில் வளைந்து ஓட...
காற்று வீச, கூந்தல் என் மேல் பட்டும் படாமல் தட்டிச் செல்ல...
என் மனதிலும் அலைபாய...
இவ்வழகு அனைத்தையும் மிகச் சிறப்பாகத் தாங்கி நிற்கும்,
விலைமதிப்பில்லா ஆபரணங்களும் தோற்றுத் தலைகுனியும்,
அம்சமாய்ப் பொருந்திய கழுத்து...
இவ்வழகு அனைத்தையும் கண்டு ரசிக்க ஒரு ஆயுள் போதாதென எண்ணி...
வரம் பெறத் தவம் செய்வேன்...
என்றும் என் மனக்கண்ணில் இவ்வழகு நீக்கமற நிறைந்திருக்க வேண்டும்...
நான் இருக்கும் வரை உன் நினைவுகள் என்னுடன் அணுவளவும் குறையாமல், உன்னை நித்தமும் நினைத்துக்கொண்டே வாழ வேண்டும்...