Demigod
Newbie

அலங்கார உடையுடன்
அங்கத்தில் தங்கமுடன்
அன்னநடை அழகுடன்
அசைந்தாடும் ரதமாக
அகல்விளக்கு ஒளியாக
அடுத்தவரை ஈர்த்திடும்
அச்சமிலா தோற்றமுடன்
அக்கம்பக்கம் திரும்பாது
அக்கரைச்சீமை பெண்ணாக
அங்ககீனம் ஏதுமின்றி
அச்சுப்பிழையிலா நூலாக
அசமந்தம் சிறிதுமின்றி
அசைவினில் நாகரிகமாக
அடர்த்திமிகு கூந்தலுடன்
அசத்தலாக நடைபோட
அடக்கமுடன் கண்டேன்
அசையாத சவமானேன் !!
Pengalai potruvom.... vanguvom......