AgaraMudhalvan
Epic Legend
˙·٠•●♥♥●•٠·˙பேரன்பு˙·٠•●♥♥●•٠·˙
எங்கிருந்தோ...
நீ கேட்கும் நலம் விசாரிப்புகள்
என்னை தினமும் நலமாக்கிக்
கொண்டிருக்கின்றது...
"நீங்க சாப்டாச்சா" என்கிற
கேள்வி நான் உண்ணாமலே
என்னை பசியாற்றுகின்றது...
"பத்திரமாக இருங்கள் "என்று
சொல்வது எனக்காக துடிக்கின்ற
உன் உயிரை நினைவுப் படுத்துகின்றது...
"நேரத்திற்கு உறங்குங்கள்! என்பது என்
சிந்தனைகள் உன்னை சுற்றி இருப்பதை
நீ அறிந்து சொல்வதை போல் இருக்கின்றது...
நீ என்னை நோக்கி அழைக்கும்
தொலைபேசி அழைப்புகள் என்னை
இயல்பு நிலையில் வைத்திருக்கிறது...
தொலைவுகள் கூட தொலைந்து போகின்றது
வலிகள் கூட மறந்துப் போகின்றது
உன் பேரன்பின் நெருக்கத்தில்...