• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

உயிரின் துடிப்பு

Yaaazhu

Novice Sprinter
உன் நிழல் கூட என் மேல் பட்டால்,
என் உயிர் தந்தியாய் மீட்கிறது!
மண்ணில் நான் வாழும் நொடிகளெல்லாம்,
உன் அன்பின் மடியில் தான் கழிகிறது!

நீ சிந்தும் புன்னகையின் வெளிச்சத்தில்,
என் இருண்ட உலகமும் அழகானது!
உன் மார்பில் சாயும் அந்த நொடியில்,
என் மரண பயமும் கூட மறைந்தது!

உலகமே எதிர்த்து நின்றாலும்,
உன் கைகள் கோர்த்து நான் நடப்பேன்!
என் இறுதி மூச்சு பிரியும் வரையில்,
உன் இதயத் துடிப்பாய் நான் வாழ்வேன்!
 
என் நிழல் உன்னை மீட்டிய பொழுதினில்,

வீணைகள் யாவும் பொறாமை கொண்டன உன்னில் ஒளிந்திருந்த ஸ்வரம் கேட்டு!!

வாழும் பொழுதுகள் யாவும் என் மடியில், இல்லை இல்லை

என் நெஞ்சினில் உன் முகம் தாங்கவே எத்தனிக்கிறேன்!

என் ஓய்வுக்காக உன் மடி கொடு, வருடங்களை நொடிகளாக்கி காலச் சக்கரத்தின் வேகத்தில் ஒரு விந்தை செய்வோம்!!!

நான் சிந்தும் புன்னகையில் உன் உலகம் ஒளி பெற்றதா....

அருமையான கற்பனை தான்,

ஆயினும் என் புன்னகைக்கு காரணம் உன்னை அல்லாது வேறு என்னவாக இருந்துவிட முடியும்!!!!

ஏன் உலகம் எதிர்க்கப் போகிறது? என் கை பற்றி நீ நடக்க,

ஒருவேளை நம் காதலைக் கண்ட பொறாமையில் நடக்கலாம்!

அறுதியிட்டுச் சொன்னாய் உன் இறுதி மூச்சு வரை நீ என்னுடன் இருப்பாய் என்று, முழுவதுமாய் என்னால் அவ்வார்த்தைகளில் மகிழ்ச்சியுற முடியவில்லை,

ஜென்மம் என்பதில் ஒருவேளை உனக்கு நம்பிக்கை இல்லையோ?
-Stanley
 
என் நெஞ்சினில் உன் முகம் தங்கவே எத்தனிக்கிறேன்!

என் ஓய்வுக்காக உன் மடி கொடு, வருடங்களை நொடிகளாக்கி காலச் சக்கரத்தின் வேகத்தில் ஒரு விந்தை செய்வோம்!!!

நான் சிந்தும் புன்னகையில் உன் உலகம் ஒளி பெற்றதா....

அருமையான கற்பனை தான்,

ஆயினும் என் புன்னகைக்கு காரணம் உன்னை அல்லாது வேறு என்னவாக இருந்துவிட முடியும்!!!!

ஏன் உலகம் எதிர்க்கப் போகிறது என் கை பற்றி நீ நடக்க,

ஒருவேளை நம் காதலைக் கண்ட பொறாமையில் நடக்கலாம்!

அறுதியிட்டுச் சொன்னாய் உன் இறுதி மூச்சு வரை நீ என்னுடன் இருப்பாய் என்று, முழுவதுமாய் என்னால் அவ்வார்த்தைகளில் மகிழ்ச்சியுற முடியவில்லை,

ஜென்மம் என்பதில் ஒருவேளை உனக்கு நம்பிக்கை இல்லையோ?
-Stanley
:nerdy: paathutu dha iruken
 
என் நிழல் உன்னை மீட்டிய பொழுதினில்,

வீணைகள் யாவும் பொறாமை கொண்டன உன்னில் ஒளிந்திருந்த ஸ்வரம் கேட்டு!!

வாழும் பொழுதுகள் யாவும் என் மடியில், இல்லை இல்லை

என் நெஞ்சினில் உன் முகம் தாங்கவே எத்தனிக்கிறேன்!

என் ஓய்வுக்காக உன் மடி கொடு, வருடங்களை நொடிகளாக்கி காலச் சக்கரத்தின் வேகத்தில் ஒரு விந்தை செய்வோம்!!!

நான் சிந்தும் புன்னகையில் உன் உலகம் ஒளி பெற்றதா....

அருமையான கற்பனை தான்,

ஆயினும் என் புன்னகைக்கு காரணம் உன்னை அல்லாது வேறு என்னவாக இருந்துவிட முடியும்!!!!

ஏன் உலகம் எதிர்க்கப் போகிறது? என் கை பற்றி நீ நடக்க,

ஒருவேளை நம் காதலைக் கண்ட பொறாமையில் நடக்கலாம்!

அறுதியிட்டுச் சொன்னாய் உன் இறுதி மூச்சு வரை நீ என்னுடன் இருப்பாய் என்று, முழுவதுமாய் என்னால் அவ்வார்த்தைகளில் மகிழ்ச்சியுற முடியவில்லை,

ஜென்மம் என்பதில் ஒருவேளை உனக்கு நம்பிக்கை இல்லையோ?
-Stanley
ஒரு ஜென்மத்தோடு நம் காதல் முடிந்துவிடுமா என்ற
உன் கேள்வி, என் நெஞ்சில் அமிர்தமாய் பாய்கிறது!
மன்னித்துவிடு அன்பே...
என் கணக்குகள் யாவும் உன்னைச் சந்திக்கும் முன்
மிகச் சிறியதாய் இருந்தது!
இறுதி மூச்சு என்பது இந்த உடலுக்கு மட்டும்தான்,
உன்னோடு கலந்த என் உயிருக்கு ஏது முடிவு?
காலச் சக்கரத்தின் வேகத்தை நொடிகளாக்கி,
உன் மடியில் நான் ஓய்வெடுக்கும் விந்தையை
யுகங்கள் கடந்தும் நாம் செய்வோம்!
பொறாமை கொள்ளும் இந்த உலகினைக் கடந்து,
உன் நெஞ்சினில் என் முகம் தாங்கி நான் வாழ்வேன்!
ஏழு ஜென்மங்கள் அல்ல...
இந்த பிரபஞ்சம் அழியும் காலம் வரை,
மரணமில்லா பெருவெளியில்
உன் இதயத் துடிப்பாய் நான் தொடர்வேன்!!!
 
Top