யாரோ சொன்னார்கள் பிடித்தவர்களை நினைத்துக்கொண்டு நிலவைப் பார்த்தால் முகம் தெரியுமென்று
நான் உன்னை நினைத்து நிலவைப் பார்த்தேன் எனக்கு நிலா தெரியவில்லை.
************************************************
இவ்வளவு பெரிய
வானம் இருந்தும் நிலவை நிலவாய் ரசிப்பதற்கு
ஒரு சின்ன சன்னல் தேவைப்படுகிறது எனக்கு.

நிலவை நம்பக்கூடாது
அது காட்டில் மாட்டிக் கொண்டவனிடம் ஒரு மாதிரியும்
கடலை ரசிப்பவனிடம் ஒரு மாதிரியும் காதலியுடன் கதைப் பேசுபவனிடம் ஒரு மாதிரியும் நடந்து கொள்கிறது.

ஒரு பயணம் செல்ல வேண்டும்
இறங்கும் இடம் தெரியாத ஒரு பயணம்
வழியெங்கிலும் கொஞ்சம் கொஞ்சமாய் என்னை உதறிக்கொண்டே செல்லும் ஒரு பயணம்
நான் அறவே இல்லாத இடத்தில் நிறையும் ஒரு பயணம்.

திறந்தே கிடக்கிறது வானம் களவாட முடியவில்லை நிலவை.

பெரிதாய் ஒன்றும் வேண்டாம் விழும்போதெல்லாம் பிடிமானமாய்ப் பிடித்துக்கொள்ள ஒரு அன்பு போதும்.

நீங்கள் வானில் பார்ப்பதெல்லாம் நிலவின் முதுகைத்தான்
முகத்தை பார்க்க வேண்டுமென்றால் சொல்லுங்கள் அவளைக் கேட்டுப் பார்க்கிறேன்.

நிராகரித்துக் கொண்டே நேசிப்பதாகச் சொல்கிறாய்.
சாத்தியமற்ற ஒன்றை நானும் நம்பிக் கொண்டிருக்கிறேன்.

என்னோடு கதை பேசுங்கள்
தேவைப்படும் போது என்னோடு வந்து தேநீர் அருந்துங்கள்
பார்க்கும் போதெல்லாம் எனக்கு ஒரு புன்னகையைத் தாருங்கள்
நேரம் கிடைக்கும் போது என்னோடு கொஞ்ச தூரம் நடந்து வாருங்கள்
உங்கள் பயணத்தில் கொஞ்ச தூரம் என்னையும் அழைத்துச் செல்லுங்கள்
என் கைகளை உங்கள் கவலைகளைச் சொல்லுங்கள் இறுகப் பற்றிக்கொண்டு
என் மகிழ்ச்சியில் பாதியைக் கடன் வாங்கிக் கொண்டாவது சிரியுங்கள்
என் ஏதாவது ஒரு விரலை கண்ணீர் துடைக்க பயன்படுத்திக் கொள்ளுங்கள்
உங்கள் நம்பகத்தனமான உலகில் என் பெயரையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
***********************************************
Author -நாடன் சூர்யா

Solave Ila , sari ipo solunga vera yena yena collections Iruku ungalta apart from these 2..
..padikuriyaaa
,,