விரல் தொடவில்லையே...நகம் படவில்லையே...
விரல் தொடவில்லையே நகம்
படவில்லையே உடல் தடையில்லையே
இது போல் ஒரு இணையில்லையே..
விழியும் விழியும் கலந்து
கலந்து பார்வை ஒன்று ஆனதே
உயிரும் உயிரும் கலந்த
போது உலகம் நின்று போனதே..
அழைக்கும்போது உதிக்க முடிந்தால்
அதற்குப் பெயரும் நிலவில்லை
நினைக்கும்போது நிலவு உதிக்கும்
நிலவு அழைக்கக் குரலில்லை
யாரைக் கேட்டது
இதயம்...யாரைக் கேட்டது இதயம்..
விழி தொடுவது விரல் தொடவில்லை...