• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

Ilayaraja enum isaiyin sagapatham

Mrbean

Idiotic JoKER of ZoZo
Senior's
Chat Pro User
90களின் ஆரம்பத்தில் இளையராஜா போல ஒரு வெறித்தனமான உழைப்பாளியை உலகம் பார்த்ததில்லை (இன்றும்தான்).

அது இன்றைய வாட்ஸ்ஆப்பில் வரலாறு படிப்பவர்களுக்குத் தெரிந்திருக்காது.

90களில் ராஜா கொடுத்த இசை ராஜவிருந்து. அத்தனை வெரைட்டியான இசை!

1993-ல் இளையராஜா இசையமைத்த தமிழ்ப் படங்களின் எண்ணிக்கை மட்டும் 35க்கும் மேல்.

தெலுங்கு, மலையாளம், மராத்தி, இந்தியில் அவர் இசையமைத்ததையும் சேர்த்தால் மொத்தம் 73!

எந்த ஒரு தனி இசையமைப்பாளர் யாரும் செய்திராத உலக சாதனை.

யாராலும் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாதது.

இத்தனைக்கும் எந்தப் படத்தின் இசை, பாடல்களாக இருந்தாலும் அவற்றை தன் நேரடி மேற்பார்வையில் செய்பவர் அவர்.

அவர் அனுமதியின்றி ஒரு சின்ன சப்தம் கூட இடம்பெறாது, எந்த பின்னணி இசை அல்லது பாடலிலும்!

1993-ல் வெளியான படங்கள், பாடல்கள் லிஸ்டைப் பாருங்கள்.

எஜமான், வள்ளி,ஆத்மா, கோயில் காளை, அரண்மனைக் கிளி, மறுபடியும், கிளிப்பேச்சு கேட்கவா, பொன்னுமணி, வள்ளி, ராக்காயி கோயில், உழைப்பாளி, வால்டர் வெற்றிவேல், சின்ன மாப்ளே, சின்ன ஜமீன், ஏழை ஜாதி, காத்திருக்க நேரமில்லை, சின்னக் கண்ணம்மா, மணிக்குயில், ஐ லவ் இந்தியா, உள்ளே வெளியே, கலைஞன்,சக்கரை தேவன்,உத்தம ராசா... இன்னும் பல...

அதற்கு முன் 1992.. ரஹ்மான் அறிமுகமான ஆண்டு. அந்த ஆண்டு ஹிட்டடித்த இளையராஜா ஆல்பங்களைப் பாருங்கள்..

வண்ண வண்ண பூக்கள், மன்னன், செந்தமிழ்ப் பாட்டு, செம்பருத்தி, சின்னவர், பாண்டியன், திருமதி பழனிச்சாமி, தங்க மனசுக்காரன், சின்னத்தாயி, சிங்கார வேலன், சின்னப் பசங்க நாங்க, இன்னிசை மழை, உன்னை வாழ்த்திப் பாடுகிறேன், சின்னக் கவுண்டர், பரதன், ஆவாரம் பூ, தேவர் மகன், நாடோடி பாட்டுக்காரன், நாடோடித் தென்றல், உன்ன நெனச்சேன் பாட்டுப் படிச்சேன், மீரா, தெய்வ வாக்கு.... இன்னும் பல..

எவ்வளவு வெரைட்டி,,

இந்த படத்து பாட்டெல்லாம் தான் இன்று ஸ்மூல் சமூகம் பாடி களிக்கிறது.

ஒரே வருடத்தில் 73 படங்கள் ..அத்தனைக்கும் பின்னணி இசை என்பதெல்லாம் இப்ப நினைத்து கூட பார்க்க முடியாது.

இன்னிசையால் தமிழ் சமூகத்தை இசைஞானி நனைத்த காலமல்லவா..

கண்டா வர சொல்லுங்க இந்த காலம்..

கண்டவர் அனைவருக்கும் வாரி வழங்கியவர் எங்கள் ராஜா..
 
Top