




உலகின் ஒட்டுமொத்த அன்பின் வலிகளைத் திரட்டி
ஆறே சொற்களுக்குள் அடைத்து விட முடியுமா!
நன்றாகப் புத்திக்குத் தெரியும், உனக்காகத்தான் இந்த வாழ்க்கையே என்று. ஆனால் ஏனோ உன்னோடு வாழமுடியாமல் போகிறது,
உன்னோடு பேசமுடியாமல் பழகமுடியாமல், தொடமுடியாமல்,
தொலைதூரங்களுக்கு அப்பால் இருவேறு திசையில் பிரிந்து போய்விடுகிறோம்.
இந்தப் பிரிவை நான் விரும்பவே இல்லை.
நான் உன்னை என் வாழ்க்கைக்குள் இருத்திக்கொள்ளத்தான் பாடுபட்டேன்.
நீ வலுக்கட்டாயமாக என்னைப் பிரித்துவிடும் போது வேறு வழியில்லை தானே! ஆயினும் இந்த வாழ்வில் 'என்னை மறந்து விடாதே' என்று இறைஞ்சிக் கொண்டிருக்கும் ஒரு குரலின் கேவல்.
"போகாதேடி" என்ற ஒற்றை கோரிக்கையை மட்டும் வைத்துக்கொண்டு
தலைகவிழ்ந்து நிற்கும் ஓர் ஆன்மா.
சாவின் கடைசி நொடி வரைக்கும் உயிரை நிரடிக் கொண்டிருக்கும் வாழமாட்டாத ஏக்கம்.
தீரவே தீராத சக்திமுகம்.
ஆறு சொற்கள்.
“உனக்கே உயிரானேன்
எந்நாளும் எனை நீ மறவாதே"

@MillaN @Aadhirai @Kothamalli @Nakshatraa ❤️ @Darky @DARKY MARS @Januu @MithrA07 @Nilaani @Pinkcandy @Pinky Sparkle @Lollipop♥️❤ @Naveen_ @Saraa







Me who don't have Knowledge on movies 


Sarii okiee popcorn vangi vachidre

