ஆரம்பமும் முடிவும் இல்லாத முகவரின் முதல் அங்கம் நீ!
கண்ணமா உன்னையே
கண்ணுக்குள் வைத்துள்ளேன்
பின்பு என்ன உன்னை நினைக்கும் ஒவ்வொரு நாளும்
ஞாயிற்றுக்கிழமையின் காலை வேலையே!!
முழுநிலவை ரசித்து
தென்றலையும்
நெடுஞ்சாலையையும் உடன் அழைத்து முடிவில்லா தொடர் பயணத்தில் மனிதர்களை துறந்து சத்தங்களை அடைத்து காதோரம் கவிப்பாடியே பயணிப்போம்!!!
யாருமில்லை புது தேசத்தை
காதலால் நீயும் நானும்
விரைவில் கண்டுபிடிப்போம்...