꧁❤•༆"என் கவிதையே"༆•❤꧂

என்னுள் ஏன் வந்தாய்??
என் மதியெல்லாம்கவிதையே
உன்னைப் பற்றியே
சிந்திக்கிறது பகலில்....
என் இரவுகளைத் திருடிக்கொண்டாய்....
உற்சாக வார்த்தையும்
கிறங்கும் வார்தைகளையும் உனக்காக தேடுகிறேன்....
கருவாக என்னுள்
ஜனித்த உன்னை
உருவாக்கி
அழகாய் சீராட்டி
பிரசவிப்பதெக்கணமென
உன்னையே ஏந்துகிறேன்....
சுகப்பிரசவமாய் பிரசவிக்கிறேன்
என் பார்வையில்....
குறைப்பிரசவமாய் சில கண்களுக்கு தெரிவதைப் பற்றி
கவலையில்லை.....
நான் பிரசவித்த
நீ......
எனக்கானது......
நீ தரும் ஆத்ம திருப்தியின்
போதை வேறு இல்லை....
என்ன அப்படி பார்க்கிறாய்??
"என் கவிதையே"........