எங்கு சென்றாலும்
உன் சாயலில் ஒரு சிலராவது எப்போதும் கண்களில் பட்டு விடுகிறார்கள்....
இல்லையென்றால் கூட
உன் முகத்தை இன்னொரு முகத்தில் வரைந்து பார்த்து விடுகிறது மனம்...
இப்படியாக ஒவ்வொரு நாளும்
உன்னை நான் தரிசித்து விடுகிறேன்....
உனக்குப் பிறகு
என்னாவேன் என்பதை உன்னில் தான்
நான் தேடிக் கொண்டிருக்கிறேன்....
பறவைகள் அமர்ந்தவுடன்
மகிழ்ந்து உதிரும் பூக்களின் கீழே நின்று கொண்டிருக்கிறேன்....
உதிர்ந்த பூக்கள் ஒரு சில
உன் மனம் கொண்டு விழுகிறது சிலவை
உன் மணம் கொண்டு வருகிறது...
இரண்டுமே எனக்கு பிடித்திருக்கிறது....
உன்னிடமிருந்து எனக்கு
அப்படி என்னதான் வேண்டும்... உன் மனம் கொண்டு எல்லோரும் என்னை நேசிக்க வேண்டும்..... அந்த அன்பில் இருக்கும் உயர்ந்தது
அதனால்தான் சொல்கிறேன்
உன்னை பிடிக்கும் என்பதில் அர்த்தம் இருக்கிறது....