ஒரு கணப்பொழுதில்
நிகழ்ந்த
அற்புத தருணத்தை
காதல் என்கிறாய்
நான் அறிந்தவரை
பசி மறத்தல்
தூக்கம் கெடல்
நினைவின் மறதி
நிஜத்தின் மாயை
தானே சிரித்தல்
தடம் பிரளல்
மொழி தொலைத்தல்
தேடி அலைதல்
வாடி உருகுதல்
இவைதான் காதல்
இலக்கணம் பாராமல்
இரவு பகலாய்
பேசி தீர்த்த பின்னும்
எவனோ ஒருத்தனின்
ஒற்றை குறுஞ்செய்திக்காய்
ஓயாமல்
அலைபேசியின் திரையை
வெறித்து பார்க்கும்
என்னுள் எப்போது
நிகழ்ந்தது அந்த அற்புதம்?
சுதந்திர வெளியின்
சுவாசத்தை விட
உன் குரலின் சிறைவாசம் பிடித்துப்போய்
பித்தியாக பிதற்றும்
இந்த நொடி
இந்த நிலை
இந்த தருணம்தான்
காதல் என்றால் அது
தினம் தினம் நிகழட்டும்
மறுபடியும்
மறுபடியும் காதலிப்போமா