அது என்னவோ தெரியவில்லை
தினந்தோறும் கட்டாயம்
மூன்று வேளை
உணவை அருந்திக்
கொள்வதைப் போலவே
அடிக்கடி உன் நினைவை
இதயத்தால் பருகி கொண்டு
விழிகளால் விடுமுறை செய்கிறேன்..
உன்னை நினைத்துக் கொண்டே
அந்த வலியின் தீயில்
பற்றி எரிந்து என்னை நானே புடம் போட்டு புத்தம் புதிதாய் வெளியேற்றுகிறேன்...
நான் உயிர் வாழ இந்த மூச்சு காற்று
எத்தனை அவசியமோ
அதை விட அத்தியாவசியமாகிபோனது
நீயும் உனது
நினைவுகளும் எனக்கு.