• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

꧁❤•༆நாட்கள்༆•❤꧂No -208

AgaraMudhalvan

Epic Legend
꧁❤•༆நாட்கள்༆•❤꧂​

அழகாக இல்லை என்று
உன்னை நீ நினைத்துக் கொண்டிருந்த
நாட்களில் கூட நேர்த்தியாக
நான் உன்னை நேசித்துக் கொண்டிருந்த நாட்கள் ஏராளம்.

மௌனமாக இருந்த
நாட்கள்
என்னை நீ சந்திக்காத
நாட்கள்
இரண்டு மணி நேரம் என்னிடம் சண்டை பிடித்த
நாட்கள்

அழுத பின் முகம் கழுவி கொள்ளாத
நாட்கள்
யாரோ என்னவோ சொன்னார்கள் என்பதை அப்படியே நீ நம்பிய
நாட்கள்

நேர்த்தியாக சிகை வாரப்படாத
நாட்கள்

உனக்காக நான் காத்திருந்தும்
கண்டுக் கொள்ளாமல் நீ
என்னை கடந்து சென்ற
நாட்கள்

உன்மீது நீயே கோபப்பட்டு
முகப் பிரகாசத்தை மறைத்து வைத்துக் கொண்டிருந்த நாட்களில் கூட நான் உன்னை நேசித்திருக்கிறேன்....

அக அழகில் வாழ்பவர்களுக்கு
புற அழகு ஒரு பொருட்டே அல்ல என்பதில்
உன்னை உதாரணம் சுட்டலாம்!!!
 
Top