விழி பேசும் மொழியெல்லாம்
அறிந்தவன் அவன்...
என் மௌனத்தின் அர்த்தங்களை
புரிந்தவன் அவன்!
ஆயிரம் கூட்டத்தில் நின்றாலும்
என் தேடல் அடங்கும்
ஒரே முகவரி அவன்.
கோபத்தில் கூட
குறையாத அன்பும்,
சிறு புன்னகையில்
தீர்த்து வைக்கும் உலகமும்
அவனோடு மட்டுமே சாத்தியம்.
விழுந்து விடுவேனோ என்ற பயத்தில்
விலகி நின்ற போதெல்லாம்,
நிழலாய் தொடராமல்
தோளாய் வந்து தாங்கியவன் அவன்!
வார்த்தைகளில் அடக்க முடியாத
என் மொத்த கவிதையும்,
நான் வாழ்ந்து பார்க்க நினைக்கும்
அழகிய வாழ்க்கையும்...
அவன் , என்னவன்!
View attachment 431939








