• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

வாழ்க்கை தத்துவம்

png_20231024_142347_0000.png

பணம் காசு மட்டும் நிம்மதியான வாழ்க்கையை தரமுடியாது.

விருப்பப்பட்டது
கிடைக்கும் வரைதான் அதன் மீது மோகம் இருக்கும் எல்லோருக்கும்.

வீட்டில் பிரிட்ஜ் இல்லாத அந்த கால நாட்களில் ஐஸ் வாட்டருக்காக ஏங்கி இருக்கிறேன். இப்போது பிரிட்ஜ் இருக்கிறது. ஆனால் ஐஸ் வாட்டர் மோகம் எங்கே போயிற்று என்று தெரியவில்லை.


டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிட வேண்டும் என்று அன்றுஆசை பட்டேன். இப்போது வாங்கிய பிறகு பெரிய ஆர்வம் இல்லை.
அலுவலகம் மற்றும் வெளியிடங்களில் டேபிளில் அமர்ந்து சாப்பிட்டு அலுத்துப் போனவனுக்கு வீட்டிலிருக்கும் போது தரையில் அமர்ந்து சாப்பிட்டால் மட்டுமே பரம திருப்தி இருக்கிறது. சோஃபாவும் அப்படித்தான்!


பீட்ஸா, பர்கர்ன்னு என்றெல்லாம் விதவிதமான பேர்கள் சொல்லினாலும் கூட, என்ன இருந்தாலும் வாழை இலை சாப்பாட்டுக்கு இணையுண்டா? என்று கடைசியில் மனமாற்றம் அடைந்தவர்களில் நானும் ஒருவன் !


ஆசைப்பட்டு வாங்கிய
Costly மொபைல் இப்போது ஏனோ பெரிதாக மனதை கவரவில்லை.


ஆயிரம் பரிசோதனைகளைச் செய்து பார்த்தபிறகு வாங்கி வைத்தேன் ஒரு Smart Tv.
ஆனால் இப்போதெல்லாம் அதிக நேரம் பார்ப்பது சலிப்பாக இருக்கிறது.


LAPTOP ஆசை பட்டு பார்த்து பார்த்து வாங்கியது. இப்போது கையிலேயே உலகத்தை காணும் வசதி வந்துவிட்டது. எல்லாம் இருந்தும் எதையும் சரிவர பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில்லை.
பயன்படுத்துவதும் இல்லை..

அன்லிமிட்டட் சாப்பாட்டை வாங்கிவிட்டு அளவுச் சாப்பாடு சாப்பிடுபவனைப் போல அதை அளவாகத்தான் பயன்படுத்தமுடிகிறது.


எல்லாவற்றையும் நினைத்துப்பார்த்தால்...
எல்லாமே ஒரு மாயையாக தோன்றுகிறது. இது ஒரு போலி வாழ்க்கை என்று உணர முடிகிறது.


மனதோடு இயைந்த வாழ்வு அல்ல
வெளியூரில் Star Hotel ல் தங்கினாலும்
மனதளவில் பெரிய நிம்மதி இல்லை.


வீட்டை அடைந்தவுடன் களைப்பில் சரி கொஞ்சநேரம் கண்ணயரலாம் என்ற நினைப்பில் தினசரி எனக்காகக் காத்திருக்கும் தலையனையைத் தான் கண்கள் தேடும்.!


இப்படியாக பல சுய பரிசோதனைகளின் வாயிலாக சில விஷயங்கள் உரைத்தன.
 உணர்த்தவும் செய்தது.


நமக்கு பண வரவு, சகல வசதிகளோடு இருக்கிறோமா என்று அடிக்கடி சரி பார்த்துக்
கொண்டாலும், ஆனால் வாழ ஆசைப்படுவது என்னவோ
நமது பழைய மனதுக்குப்பிடித்த
நெருக்கமான வாழ்வைத்தான்
!
 
எதிலும்அளவோடு இருந்தால்....

அவதிப்படவும் தேவையில்லை !

அவமானப்படவும் தேவையில்லை !

20230704_220400_0000-removebg-preview (1).png
 
எதிர்பார்ப்புகளை
குறைக்க
தொடங்கி
விட்டேன்....

பல்வேறு
ஏமாற்றங்களை
சந்தித்த
பிறகு....

20230704_220400_0000-removebg-preview (1).png
 
Top