நீ.. நான்.. நிலா
கார்காலத்தில் கண்டேன் அந்த வெண்ணிலவை.. அன்று
வண்ணத்துப் பூச்சிக்கள் வட்டமிட...
தனிமை காதலர்கள் உன்னை காண தவம் கிடக்க... உலாவியின் ஒளி இசைக்க.. எண்ணற்ற நட்சத்திரங்கள் என் விழி மறைக்க... விண்மீன் சிமிட்டும் வானில் நிறைந்து நின்ற முழுமதி நீ...
வலிகள் மறைத்து சிரித்திடும் உன் விழிகளை காண விடியல் பார்க்காமல் விழித்தெழுந்து வருவேன் .. என் இசை கம்பளத்தில் நீ வளம் வர...
உரைப்பெனும் பெயர் ஈன்ற கள்வன் ஒருவனுக்கு கடமை பட்டேன்.. என் நிலவேறும் பாதைக்கு பூ தெளித்தமைக்கு என்றும் நன்றி.. நண்பி !
அவள் அண்ணன் அரங்கேறும் வேளையில், என் அன்பை அளவாய் கசிக்கும் நொடிப்பொழுதில் ..அச்சத்தின் உச்சத்தில் அவள் சிந்தும் குறுஞ்சிரிப்பு அழகு !
இப்பிறையை பார்த்து சுயநினைவு இழந்த நாட்கள் பல... கட்டி வைத்த என் கரங்களை கட்டவிழ்த்தேன் உன் பெயரை தினம் தினம் கிறுக்க...இரண்டெழுத்து ராணி!
தான் தொலைத்த நிலவை தேடி வான் நோக்கி நின்றவர் நடுவில் நின்றேன் நான்... வெளிச்சம் தந்தாய் நீ... என் இதயம் நிறைந்தாய் நீ !!
இனிப்பை மறந்த உன் நாவில் தேன் தெளிக்க வந்தவன் நானோ!
இரவுகளை கடக்க இரவலாய் இறங்கி வந்து இதழ் தாண்டாத வார்த்தைகள் நீ பேச, இமை மூடாமல் ரசித்தேன்...மறந்தேன்.. கொடுத்தேன்.. என்னை!
வண்ணம் பூசிய உன் விரல்களின் இடையில் நான் சிக்கித் தவிக்க.. என் நாணலும் (நாணமும்) நடுங்கிப் போகிறது உன் அருகினில்...
நிலை கொள்ளாது தவிக்கும் போது.. நிலைத்த ஏதேனும் ஒன்று.. நினைவில் மட்டுமல்ல என் நிழளுக்கும் கரம் கொடுத்தால்... கார் இருளில் நகர்ந்திடும் கார் மேகம் போல்..தொலைந்திடும் தொல்லைகள் இன்றியே...!
கண்டம் விட்டு கண்டம் செல்லும் எனக்கு விண்ணுலகில் வீடு கட்டி அழகு பார்த்த வான் தேவதை நீ !
ஆர்ம்ஸ்ட்ராங் ஆக உன் உலகில் கர்வத்தோடு நின்றேன்.. நிசப்த நிலா நிறைவாக ஒளி வீசியது..
நட்சத்திரம் புதைத்த சிகப்பு மின்மினி நீ... என்னை தாக்கிய கண்மணி நீ..!
நிலவுக்கு நிழலாக நான் நிற்க... என்றும், இனி தனிமை மறப்போம் வெண்ணிலவே...!
எளிமை என்னும் ஏஞ்சலுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! என்
நிலா நீ.. நிலானி....

இப்படிக்கு உன்
Lunar Eclipse
Lunar Eclipse
Last edited by a moderator: