• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

நான்(ம்) ரசித்த வரிகள் ❤️


அவள்! நிழல் என்றான்!

நான்! நிஜம் என்றான்!

நிஜமாய் வேண்டும் என்றான்!

நிகழ்ந்தேன்!!

நிஜம் வெறுத்தான்!

வேறு நிழலில் துயில்கின்றான்!

நான் இங்கு

நிஜமான நிழலானேன்!!


6c714e7723717f747080e91b90316dcc.jpg
 


பெண்கள் தினமே இன்று!

அன்று சிசுவில் கருகி

இன்று சிகரம் தொடுபவளுக்கு!
✨
அன்று பதின் மணமுடித்து

இன்று பள்ளி தாண்டியவளுக்கு!
✨
அன்று வயலில் நின்று
இன்று வானில் பறப்பவளுக்கு!
✨
அன்று அடுப்படியில் வெந்து
இன்று அரசுகள் ஆள்பவளுக்கு!
✨
அன்று வெண்சீலை உடுத்தி

இன்று வெள்ளித்திரை மின்னுபவளுக்கு!
✨

பசிக்கொலை செய்கிறவளுக்கு!

நோய்ப்பிணி வெல்கிறவளுக்கு!
காவல் தெய்வத்திற்கு!
காதல் மனைவிக்கு!
❤️

பெண்கள் தினமே இன்று!

என் பாரதி வீட்டின்

மீசை வைத்த
வீர பூனைக்கும் :p

பெண்கள் தினமே இன்று!
✨

a8d58f089bcbccc1d3b0c67bd30352fb.jpg
 

உன் முத்தங்கள்
தின்று செழித்த
என் கன்னங்களுக்கு
வெறும் கண்ணீர்
ஊட்டி பசி ஆற்றுகிறேன்


காதல் வறுமை!

bd6458a5e28601d20112757639b940ab.jpg
 
Top