மக்கும் குப்பை என சில
மக்காத நெகிழியாய் பல
சிரிக்க சில அழுக பல
சிறுவயது முதல் சில
இப்பொழுதைக்கானவை பல
மேலோட்டமாய் சில
அல்ல முடியாத ஆழத்தில் பல
இதோ அதோ என வெடிக்க
காத்திருக்கும் எரிமலையாய் சில
இப்பொழுதே அணைந்து போகும்
அகல் விளக்காய் பல
காலை பனியின் மென் சீண்டலாய் சில
குத்தும் பனியின் ஊடுருவளாய் பல
அண்டம் பிளந்த ஆதிகாலத்தின் எச்சமாய் சில
வேலிக்குள் அடங்கா முடிவெளியாய் சில
அணுவை போல சிறிதாய் சில
அனுவின் ஆற்றலைபோல் பெரிதாய் பல
உறவுகளென சில உணர்வுகளென பல
பாம்பென சில பச்சோந்தியென பல
பரிதவிக்க சில பரிதாபப்பட பல
படபடக்க சில பதைபதைக்க பல
ஞாபகங்களே ஞானம்
ஞாபகங்களே ஞாலம்
ஞாபகங்களே காயம்
ஞாபகங்களே மருந்தாகும்
ஞாபகங்கள் மாயும் நேரம்
என் உடலில் இல்லை நானும் !!!
மக்காத நெகிழியாய் பல
சிரிக்க சில அழுக பல
சிறுவயது முதல் சில
இப்பொழுதைக்கானவை பல
மேலோட்டமாய் சில
அல்ல முடியாத ஆழத்தில் பல
இதோ அதோ என வெடிக்க
காத்திருக்கும் எரிமலையாய் சில
இப்பொழுதே அணைந்து போகும்
அகல் விளக்காய் பல
காலை பனியின் மென் சீண்டலாய் சில
குத்தும் பனியின் ஊடுருவளாய் பல
அண்டம் பிளந்த ஆதிகாலத்தின் எச்சமாய் சில
வேலிக்குள் அடங்கா முடிவெளியாய் சில
அணுவை போல சிறிதாய் சில
அனுவின் ஆற்றலைபோல் பெரிதாய் பல
உறவுகளென சில உணர்வுகளென பல
பாம்பென சில பச்சோந்தியென பல
பரிதவிக்க சில பரிதாபப்பட பல
படபடக்க சில பதைபதைக்க பல
ஞாபகங்களே ஞானம்
ஞாபகங்களே ஞாலம்
ஞாபகங்களே காயம்
ஞாபகங்களே மருந்தாகும்
ஞாபகங்கள் மாயும் நேரம்
என் உடலில் இல்லை நானும் !!!