உடனிருவென எப்போதாவது கேட்டிருக்கிறேனா.....
ஏன் அருகில் இல்லையென எப்போதாவது சண்டையிட்டிருக்கிறேனா....
கனத்த தருணமொன்றில் அழைப்பெடுத்து
என்னை தேற்றிவிடென அடம்பிடித்திருக்கிறேனா....
இப்போதே பேசியாகவேண்டும் இப்போதே பார்த்தாகவேண்டுமென எப்போதாவது பிடிவாதம்பிடித்திருக்கிறேனா.....
இடைவெளிகள் கொடுமையென எப்போதாவது
சலித்து உன்னிடம் வெறுத்திருக்கிறேனா.....
நீ இப்படித்தான் இருந்தாகவேண்டுமென
எப்போதாவது கட்டாயப்படுத்தியிருக்கிறேனா.....
எதுவும் இல்லையே நீ நீயாக வாழென்பதைத்தவிர
எதையும் உன்னிடம் எதிர்பார்த்ததில்லையே
ஒரு வேளை இப்படியெல்லாம் நடந்து கொண்டால்தான் அன்பென்று அர்த்தமா
நான் உன்னிடம் அப்படியெல்லாம் நடந்து கொண்டிருக்க வேண்டுமோ
தெரியவில்லை.......
நீ எல்லாம்முடிந்தனென சென்றபிறகு கூற எந்தபதில்களும் என்னிடம்
இல்லை .....இதைத்தாண்டி நேசிப்பது
எப்படியென்றும் தெரியவில்லை......
மனதில் எந்தவித பாரங்களுமின்றி சென்றுவா என்பதைத்தவிர உன்னிடம்
எதுவும் கூறத் தோன்றவில்லை......

Last edited: