MINSAARAKKANNAA✨✨
Wellknown Ace
நரம்புகள் முழுக்கத் தழற்காடெனப் பொலியும் முத்தப் பூக்களால் ஆன செவ்வரிச் சுடருன் அதரங்கள்.
ஈரிதழ்களால் உடற் கொடியெங்கும்
மென் முகை செய்யும்
மனோகர வனப்பேச்சி நீ
காற்றெனத் தழுவிக் கொஞ்சி வேர் வரை இனிக்கிற பெயலாயென் பெயர் விகசிக்குமுன் உதடுகள்,
செண்பகத் தோப்பின் சவுந்தரியக் கள்ளூறி ஓசனிச்சிட்டுகள் பாடும் கீதமுன் குரல்,
வெளிர் பாசி நிறம் பூசிக் குளித்துக் கரையேறிக் கொன்றை மரமொன்றில் நிலா வீற்றிருக்கும் ஆரண்யமுன் பெயர்.


