• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

அப்பொழுதே தெரிந்திருந்தால் "❣️

அப்போது தெரியவில்லை
வாசனை மலர்களை
வெறும் காதல்மட்டும்
கொண்டு என்றும்
வாடாமல் தடுக்க
முடியாதென்று...
​
 
அப்போது தெரியவில்லை
அன்பென்ற ஒரு
உணர்வு அளவு மீறிச்
சென்றுவிட்டால்
தனிமையை பரிசாய்
தருமென்று...

​
 
அப்போது தெரியவில்லை
பணம் என்னும்
காகித குப்பை
மனதை விட
முக்கியமாய்
மாறுமென்று...


​
 
அப்போது தெரியவில்லை
மாதவிடாயோ

மாசக்கடைசியோ
வெளியில் சொல்ல
இயலா வலியைத்
தருமென்று...
​
 
அப்போதே தெரிந்திருந்தால்
நானும் கொஞ்சம்
நடிக்க பழகியிருப்பேன்..
மாயை வாழ்வில்
மாயமாய் போய்விட்டதோ
மதியும் மனிதமும்...
​
 
Back
Top