˙·٠•●♥♥●•٠·˙சண்டை˙·٠•●♥♥●•٠·˙
ஒரு சண்டையை முடிக்க ஆண் கையில் எடுக்கும் வாசகம்.
'இப்ப உனக்கு என்ன பிரச்சினை'?
அந்த சண்டையை முடிக்க விடாமல் பெண் பதில் அளிக்கும் வாசகம்.
'எதுவும் பிரச்சினை இல்லை உங்க வேலையை பார்க்கலாம்'.
ஒரு சண்டையை முடிக்க ஆண் கையில் எடுக்கும் வாசகம்.
'சரி என் மேலே தான் தப்பு…
இனி செய்யலை மன்னிச்சிடு'.
அந்த சண்டையை முடிக்க விடாமல் பெண் பதில் அளிக்கும் வாசகம்.
'உங்களை மன்னிக்க நான் யார் ஸார்…
யாரோ தானே நான்'.
ஒரு சண்டையை முடிக்க ஆண் கையில் எடுக்கும் வாசகம்.
'சரி ஓகே நான் கிளம்பறேன்'.
அந்த சண்டையை முடிக்க விடாமல் பெண் பதில் அளிக்கும் வாசகம்.
'அதானே நான் எப்படி போனா உங்களுக்கென்ன?'
ஒரு சண்டையை முடிக்க ஆண் கையில் எடுக்கும் வாசகம்.
'இனி இந்த தப்பை இன்னொரு தடவை செஞ்சா செருப்பால் அடி'
அந்த சண்டையை முடிக்க விடாமல் பெண் பதில் அளிக்கும் வாசகம்.
'இதே தான் போன தடவையும் சொன்னீங்க…
அடிச்சிக்கிட்டீங்களா என்ன?'
அவளாய் பார்த்து சமாதானமாகி, போனால் போகிறதென்று விட்டால் தான் உண்டு.
அதுவரை நீ சமாதானம் என்ற பெயரில் கொஞ்சியும் கெஞ்சியும் அங்கேயே தான் இருக்க வேண்டும்.
எக்கேடாவது கெட்டு தொலை என்று விடவும் முடியாது,
இனியொரு முறை இப்படி நடக்காதென்று உறுதி மொழியும் கொடுக்க முடியாது.
ஏனென்றால் இதற்கு முன் லட்ச தடவை அது நடந்திருக்கும்.
அது நடந்த தேதி காலம் நிமிடம் வரை ஞாபகத்தில் வைத்துக்கொண்டு கேள்வியாலே துளைத்தெடுப்பாள்.
ஒரு சண்டை சங்கிலி தொடர்போல ஒன்றன்பின் ஒன்றாக பின்னோக்கி நகரும்.
அன்னிக்கு அது செஞ்சிங்களே,
அன்னிக்கு இப்படி சொன்னிங்களே,
கேக்கணும் நினைச்சேன்..
இப்பதான் ஞாபகத்துக்கு வந்ததுன்னு ஒண்ணு ஒண்ணா போகும்.
இது எப்போது நடந்தது?
நான் சொன்னேனா?
முதலில் இது நடந்ததா என்று யோசித்து யோசித்து ஒன்று ஒன்றாக பதில் அளித்து வருவதற்குள்
ஏன்டா சண்டை போட்டோம்னு ஆயிடும் ஒவ்வொரு ஆண்
களுக்கும்..
ஆனாலும் விட மாட்டாங்க