˙·٠•●♥♥●•٠·˙கண்ணம்மா ˙·٠•●♥♥●•٠·˙
ஒழுங்கில்லா அலைவரிசையில்
வந்து போகிறது.
வலப்புற
இடப்புற
விழிகளுக்குள் பாலையின்
வெப்ப மணல்.
பாதையை நாடாமலே
நெருஞ்சி முட்கள்
பாதம் முழுவதுமாய்.
மதில்மேல் பூனையாய்
தவிப்பதையறிவாயா
மாயக்கதவுக்கு
பூட்டுகள் இடவில்லை.
நித்திரையிலாவதும்
யாத்திரையாய்
வந்துவிட்டு போ.
கொடும்நெருப்பு
கொஞ்சம்
அணையட்டும்.
கண்ணம்மா.
