ஒரு பெண்ணை எப்படி ஈர்ப்பது
ஒரு ஆண் பெண்ணை எங்கே தொடுகிறான் என்பதால் அல்ல., அவளை எப்படித் தொடுகிறான் என்பதாலேயே அவளை பாதுகாப்பாக உணர செய்ய முடியும்.
அவள் பாதுகாப்பாக உணர்ந்தால் அவள் தானாக ஈர்க்கப்படுவாள்.
அவளை எப்படி தொடுகிறான் என்பதால் அல்ல, அவளை எதற்காக தொடுகிறான் என்பதால் அவள் ஈர்க்கப்படுகிறாள்.
உங்கள் தொடுதலுக்கான காரணங்கள், அவளுக்கானதாக இருந்தால் நீங்கள் அவளால் ஈர்க்கப்படுவீர்கள்.
அவளை எப்படி தொடுகிறான் என்பதால் அல்ல, தொடுவதற்கு முந்தைய தருணங்கள், அவன் செலவழித்த நேரங்கள், பரிமாறிய நேசங்கள், இவை அவளுக்கு உண்மையானதாக இருந்தால் நீங்கள் அவளால் ஈர்க்கப்படுவீர்கள்.
அவனது தொடுதல் முக்கியம் அல்ல, தொடுதலில் நோக்கமே முக்கியமானது.
இவை அனைத்தும் சீராக இருக்கும்போது, அவளை ஈர்க்கத் தேவையானது தொடுதல் அல்ல, ஒரு வார்த்தை, ஒரு மூச்சு அல்லது அவனது ஒரு பார்வை கூட போதும்.
இது ஒரு கனவு, ஒரு கட்டுக்கதை அல்லது ஒரு ஆணின் சாத்தியமற்ற காதல் கற்பனை அல்ல - இது ஒவ்வொரு ஆணுக்கும் இருக்கும் உள்ளார்ந்த ஆற்றல்.
தனது ஆற்றலின் மகத்துவத்தை வைத்து வாழவும், ஒரு பெண்ணை தன்பால் ஈர்க்கவும், தனது பொறுப்புகளை நிறைவேற்றவும், அவளால் வரும் சவால்களை வெல்லவும், தனது சாக்குப்போக்குகளை கைவிடவும் தைரியத்துடன் உலகில் வாழவும் அந்த ஆணுக்கு துணிச்சலுடன், அவளை கையாளும் பொறுமையும் இருக்க வேண்டும்.
உலகை வெல்லும் ரகசியம் எதுவும் இல்லை, அது ஒருவரின் திறனை நிறைவேற்றுவதற்கான முயற்சி.
அதேபோல் ஒரு பெண்ணைத் ஈர்க்க எந்த தொழில்நுட்பமும் இல்லை, அது உங்கள் நோக்கத்தின் விளைவு.
உங்கள் நோக்கம் சரியாக இருந்தால், அவள் இந்த உலகையே எதிர்த்து உங்களிடம் வருவாள்.
அதே, உங்கள் நோக்கம் தவறாக இருந்தால் அவளிடமிருந்து கடவுள்தான் உங்களை காப்பாற்ற வேண்டும்.
வாழ்த்துக்கள் நண்பர்களே.
புரிந்தால் வாழ்க்கை உங்களுடையது..