என் கனவைக் கலைத்து இராகம்
பாடி வந்த காலைக் காற்றுக்கு
சற்று தெம்பூட்ட சமையிலறைத்
தேநீர் சத்தம் கொடுத்து வரவேற்றது...
சுவையான தேநீர் கையில் ஏறியதும் தேநீர் துளிகளின் அட்டகாசம் நீ
முந்தி நான் முந்தியென மாதின்
இதழ் நனைக்கத் துடித்துக் குதித்தன...
மிதமான சூட்டில் இதமாய்ப் பதமாய் தேநீரின் முதல் மிடறு இறங்கியதும் கங்கை நீரென மகிழ்வில் பாக்கள்..
மங்கை முகத்தில் ஆயிரம் பூக்கள்...


Reactions: Joey, SkyLub Jazz and Horsepower