Hangova
Favoured Frenzy
முத்தத் தீயில் மோகப் பார்வைகள் வீசினாய்
தொடும் நேரம் தூரங்கள் வினவினாய்
ஒரு நொடி போதும்
மூச்சுக்குள் முக்கால்வாசி தீர்ந்தே போகும்
தண்ணீர் தேடும் மீன் போல
உன் தீண்டல் தேடி மட்டும் உயிர் வாழ்கிறேன்
சுழிக்காதே, நான் சிறப்பு ழகரம் ஆகிறேன்
அழகாய் என்னை இசைக்கும் பொழுது
உயிர் மொழியில் வெட்கங்கள் பூக்குதே
கனவா கானலா காட்சிப்போரில் நான்!
வாழ்ந்திருக்கவா
வீழ்ந்திருக்கவா
முப்பொழுதும் உன் கற்பனையில்!
தொடும் நேரம் தூரங்கள் வினவினாய்
ஒரு நொடி போதும்
மூச்சுக்குள் முக்கால்வாசி தீர்ந்தே போகும்
தண்ணீர் தேடும் மீன் போல
உன் தீண்டல் தேடி மட்டும் உயிர் வாழ்கிறேன்
சுழிக்காதே, நான் சிறப்பு ழகரம் ஆகிறேன்
அழகாய் என்னை இசைக்கும் பொழுது
உயிர் மொழியில் வெட்கங்கள் பூக்குதே
கனவா கானலா காட்சிப்போரில் நான்!
வாழ்ந்திருக்கவா
வீழ்ந்திருக்கவா
முப்பொழுதும் உன் கற்பனையில்!





