• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

உறக்கமின்றி

Baron_Smith

Wellknown Ace
உறக்கம் வேண்டும் என நான் வேண்டுகிறேன்..
வரம் ஒன்று கொடுத்தாய் நான் வேண்டாமலே..
உறங்கினாலும் உன் நினைவுகள் அலை போல் மோதி என் கல் போன்ற மனதை கரைக்கின்றது தினமும்..
உறங்கவிடினும் என் மனக்கண்ணில் உன்னையே நான் காண்கின்றேன்..
நித்தமும் என் சிந்தையில் நீ..
எப்பொழுதும் என்னை உறங்காமல் வைத்துக்கொள்கிறாய்..
 
விழிகள் மூடினாலும்

நீதானே என் வெளிச்சம்,

உறக்கம் தராத தண்டனையிலும்

உன் நினைவே எனக்கு வரம்.
 
விழிகள் மூடினாலும்

நீதானே என் வெளிச்சம்,

உறக்கம் தராத தண்டனையிலும்

உன் நினைவே எனக்கு வரம்.
நீ கொடுக்கும் தண்டனையை நான் வரமென ஏற்றுக்கொள்வதாயின்..
நான் கொடுக்கும் தட்சணைகளை நீ என்றும் ஏற்றுக்கொள்ள வேண்டும்..
 
நீ கொடுக்கும் தண்டனையை நான் வரமென ஏற்றுக்கொள்வதாயின்..
நான் கொடுக்கும் தட்சணைகளை நீ என்றும் ஏற்றுக்கொள்ள வேண்டும்..
உன் தண்டனையை வரமென ஏற்கும்
மனப்பக்குவம் எனக்கிருக்கையில்,
நீ தரும் தட்சணையை மறுக்க
என் இதயத்திற்கு ஏது அதிகாரம்?
 
உன் தண்டனையை வரமென ஏற்கும்
மனப்பக்குவம் எனக்கிருக்கையில்,
நீ தரும் தட்சணையை மறுக்க
என் இதயத்திற்கு ஏது அதிகாரம்?
உந்தன் இதயம் என் தட்சணைகளை மட்டும் தான் ஏற்குமா என்னிடம் இருந்து!?
 
உந்தன் இதயம் என் தட்சணைகளை மட்டும் தான் ஏற்குமா என்னிடம் இருந்து!?
பொருளாய் நீ தரும் தட்சணை ஒருபுறம் இருக்கட்டும்...
நீ தரும் அன்பையும்,
என்னை மட்டுமே தேடும் உன் விழிகளின் பார்வையும்,
ஆயுள் வரை என்னோடு பகிரும் உன் நினைவுகளையும்தான்
என் இதயம் பேராசையோடு கேட்டு நிற்கிறது!


நீ தருவது எதுவாயினும்,
அது உன்னிடமிருந்து வரும்வரை
என் இதயத்திற்கு எல்லாமே பொக்கிஷம்தான்!
 
என்னிடம் பொக்கிஷமாய் அறிந்த ஒன்று என்னிடம் இல்லை இன்று..
அதனையே நான் இழந்துவிட்டேன்..
உன்னை கண்ட அந்த முதல் பொழுதில்..
இழந்தும் நான் உயிர் வாழ்கிறேன்..
உன் நினைவுகளும் அரவணைப்பும் என்னை உயிருடன் இன்பமாய் வைத்துள்ளன..
 
உறக்கம் வேண்டும் என நான் வேண்டுகிறேன்..
வரம் ஒன்று கொடுத்தாய் நான் வேண்டாமலே..
உறங்கினாலும் உன் நினைவுகள் அலை போல் மோதி என் கல் போன்ற மனதை கரைக்கின்றது தினமும்..
உறங்கவிடினும் என் மனக்கண்ணில் உன்னையே நான் காண்கின்றேன்..
நித்தமும் என் சிந்தையில் நீ..
எப்பொழுதும் என்னை உறங்காமல் வைத்துக்கொள்கிறாய்..

மறக்க நினைக்கும் மனதிற்கும், மறக்க மறுக்கும் நினைவுகளுக்கும் இடையில் தினமும் ஒரு மௌனப் போராட்டம்…

கண்களை மூடினால் கனவாகிறாய், விழிகளைத் திறந்தால் நினைவாகிறாய்… உன்னைத் தொலைக்கவும் முடியாமல், உன்னோடு வாழவும் முடியாமல், என் இரவுகள் மட்டும் விடியலின்றித் தவிக்கின்றன…

உறக்கம் என்னைத் தழுவினாலும், உன் நினைவுகள் என்னை விடுவதாயில்லை… உன்னை மறக்கத்தான் விழைகிறேன், ஆனால் என் மனமோ உன்னை மறப்பதையே மறந்துவிட்டது…

​
 
என்னிடம் பொக்கிஷமாய் அறிந்த ஒன்று என்னிடம் இல்லை இன்று..
அதனையே நான் இழந்துவிட்டேன்..
உன்னை கண்ட அந்த முதல் பொழுதில்..
இழந்தும் நான் உயிர் வாழ்கிறேன்..
உன் நினைவுகளும் அரவணைப்பும் என்னை உயிருடன் இன்பமாய் வைத்துள்ளன..
உன்னை இழந்த வலியைவிட, உன் நினைவுகளோடு வாழும் சுகமே அதிகம் போல…
நீ அருகில் இல்லையென்றாலும், என் நினைவுகளில் என்றும் என்னோடு வாழ்கிறாய்.
 
மறக்க நினைக்கும் மனதிற்கும், மறக்க மறுக்கும் நினைவுகளுக்கும் இடையில் தினமும் ஒரு மௌனப் போராட்டம்…

கண்களை மூடினால் கனவாகிறாய், விழிகளைத் திறந்தால் நினைவாகிறாய்… உன்னைத் தொலைக்கவும் முடியாமல், உன்னோடு வாழவும் முடியாமல், என் இரவுகள் மட்டும் விடியலின்றித் தவிக்கின்றன…

உறக்கம் என்னைத் தழுவினாலும், உன் நினைவுகள் என்னை விடுவதாயில்லை… உன்னை மறக்கத்தான் விழைகிறேன், ஆனால் என் மனமோ உன்னை மறப்பதையே மறந்துவிட்டது…

​
உன்னை முழுவதுமாக மறப்பேன் எனில் அன்று நான் மறைந்துபோவன், உன் நினைவுகளில் வாழ்வேன் என்ற நம்பிக்கையில் மகிழ்ச்சியாய்..

என் சுவடுகள் உன் நினைவுகளில் வாழ்ந்து உன்னை துயரப்படுத்துமே ஆனால், என்னை முழுவதுமாக அழித்துவிடு.. அதுவும் எனக்கு மகிழ்ச்சியே..

தினமும் நான் உறங்க ஒரு வழி கூறுவாயோ..
ஆதவனுக்கும் சந்திரனுக்கும் உறக்கம் உண்டெனில்..
உன்னையே என்றும் கொண்டிருக்கும் என் நினைவிற்கு உறக்கம் வேண்டாமா..

அச்சம் யாதெனில்..
அப்படி என் நினைவு உறங்கிவிட்டால், நான் முழுவதுமாய் உறங்கிவிடுவேனோ, இன்னொரு முறை உன்னை நினைக்காமல் எனது சிந்தையும் மனமும் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்று விடுமோ மீள முடியாமல்..
 
உன்னை இழந்த வலியைவிட, உன் நினைவுகளோடு வாழும் சுகமே அதிகம் போல…
நீ அருகில் இல்லையென்றாலும், என் நினைவுகளில் என்றும் என்னோடு வாழ்கிறாய்.
என் நினைவுகள் உனக்கு சுகமே அன்றி துயரம் தருமாயின், என் நினைவுகளையும் அழித்துவிடு முழுவதுமாய்..
உன்னை துயர படுத்தி வாழும் என் நினைவுகளும் எனக்கு சாபமே..
 
என் நினைவுகள் உனக்கு சுகமே அன்றி துயரம் தருமாயின், என் நினைவுகளையும் அழித்துவிடு முழுவதுமாய்..
உன்னை துயர படுத்தி வாழும் என் நினைவுகளும் எனக்கு சாபமே..
உன் வேதனையை விட அவளின் நிம்மதியே பெரிது என்று நினைக்கும் இந்தத் தூய அன்பே, அந்த நினைவுகளை ஒருபோதும் சாபமாக மாற விடாது.
காலம் மெல்ல மெல்ல அந்தத் துயரத்தின் கூர்மையைக் குறைத்து, மனதை அமைதிப்படுத்தட்டும்
 
உன் வேதனையை விட அவளின் நிம்மதியே பெரிது என்று நினைக்கும் இந்தத் தூய அன்பே, அந்த நினைவுகளை ஒருபோதும் சாபமாக மாற விடாது.
காலம் மெல்ல மெல்ல அந்தத் துயரத்தின் கூர்மையைக் குறைத்து, மனதை அமைதிப்படுத்தட்டும்
THE END
 
உன்னை இழந்த வலியைவிட, உன் நினைவுகளோடு வாழும் சுகமே அதிகம் போல…
நீ அருகில் இல்லையென்றாலும், என் நினைவுகளில் என்றும் என்னோடு வாழ்கிறாய்.
Ingaye enna saavadichitta dhane
 
Top