காலை கனவில்
காதல் கொண்டேன்



காலையில் கனவில் காதல் கொண்டேன்...
மௌனத்தின் நடுவே அவன் பார்வை,
இதயம் ஒரு தாளம் தட்டியது,
சொல்ல முடியாத உணர்ச்சி
அது காதலா? கனவா?



கண் விழித்தேன்... அவன் காணவில்லை.
காற்று கூட அவன் வாசம் இன்றி,
மழைத் துளி போல மறைந்துபோனான்…
கனவில் மட்டும் வாழும் அவன்,
உண்மையில் ஏன் இல்லை?



கனவு தொடர்கிறது,
ஒவ்வொரு இரவும் அதே முகம்,
அதே புன்னகை.
நெஞ்சம் கேட்கிறது
“இது கனவா? அல்லது விதியா?”
காலையில் கனவில் காதல் கொண்டேன்,
அந்த புன்னகை இன்று நினைவாய் மாறி,
அந்த கண்கள் இன்னும் இதயத்தில் தங்கி,
காத்திருக்கிறது என் உயிர் —
அவன் ஒருநாள் வருவானா என...



உன்னுடன் என்னை ஒன்றாக்கும் வரை,
இதயம் ஓய்வெடுப்பதில்லை.
என்ன செய்தாலும், மனம் கேட்கவில்லை —
அவன் பெயர் சொல்லும் ஓசை மட்டும்
இன்னும் உள்ளத்தில் ஒலிக்கிறது…
ஒரு கனவில் தொடங்கிய காதல்,
இப்போது ஒரு நெஞ்சின் நிழலாக வாழ்கிறது.....




Thookam varalena
Ipadi tan kirukuvom!
காதல் கொண்டேன்


காலையில் கனவில் காதல் கொண்டேன்...
மௌனத்தின் நடுவே அவன் பார்வை,
இதயம் ஒரு தாளம் தட்டியது,
அது காதலா? கனவா?


கண் விழித்தேன்... அவன் காணவில்லை.
காற்று கூட அவன் வாசம் இன்றி,
மழைத் துளி போல மறைந்துபோனான்…
கனவில் மட்டும் வாழும் அவன்,
உண்மையில் ஏன் இல்லை?


கனவு தொடர்கிறது,
ஒவ்வொரு இரவும் அதே முகம்,
அதே புன்னகை.
நெஞ்சம் கேட்கிறது
காலையில் கனவில் காதல் கொண்டேன்,
அந்த புன்னகை இன்று நினைவாய் மாறி,
அந்த கண்கள் இன்னும் இதயத்தில் தங்கி,
அவன் ஒருநாள் வருவானா என...


உன்னுடன் என்னை ஒன்றாக்கும் வரை,
இதயம் ஓய்வெடுப்பதில்லை.
என்ன செய்தாலும், மனம் கேட்கவில்லை —
அவன் பெயர் சொல்லும் ஓசை மட்டும்
இன்னும் உள்ளத்தில் ஒலிக்கிறது…
இப்போது ஒரு நெஞ்சின் நிழலாக வாழ்கிறது.....



Thookam varalena
Ipadi tan kirukuvom!
Last edited:












