அன்பின் ஆகச் சிறந்த பரிசுகள்..
நாள் முழுக்க பேசச்சொல்லி
அடம்பிடிப்பதா.
பிடித்தங்களை சொல்லி புலம்பிக் கொள்வதா.
என்னைத்தவிர வேறு யாருடனும்
பேசாதே எனச் சண்டை செய்வதா.
கோபம் கொள்வதா முத்தம் கேட்டுக் கெஞ்சுவதா..
உனக்கு நான் எனக்கு நீ என்று
எல்லை மீறுவதா.
இவை எதுவும் இல்லை,
அவளோடு ஆற அமர்ந்து ஒரு
தேநீர் அருந்துவது.
காலாற இருவரும் ஓர் நடை பயணம் போவது.
அன்றையா நாளில் எதிர்கொண்ட சுவாரஸ்யங்கள் பற்றி பேசிக்கொள்வது.
பின் இறுக பற்றிய கைகளை
சற்று விலக்கிக்கொண்டு விடைபெறுவது இவையே அன்பில் ஆகச் சிறந்த பரிசுகள்...