முத்து, வைரம், வைடூரியம், மாணிக்கம், நீலம், மரகதம், புஷ்பராகம், பவளம், கோமேதகமென நவரத்தினங்களை
ஒன்று சேர்த்து உனக்கென கிரீடத்தை
செய்திட ஆசைப்பட்டேன் ஆனால் நவரத்தினங்கள் மறுத்துவிட்டது
எவ்வளவோ கொஞ்சியும் மறுத்துவிட்டது காரணத்தை வேண்டினேன் மின்னுவதே எங்களின் அடையாளம் உன்னவளின் தலையில் ஏறினால் அவளின் பேரழகில் நாங்கள் எங்களை இழக்க வேண்டிய சூழல் உருவாகும் அவள் முன்னால் எங்களின் ஜொலிப்பு மண்ணாகிவிடும்
ஆதலால் அவளின் தலையில் ஏறும் தகுதி எங்களுக்கில்லை என்றது சரியென தோன்றியதால் அவ்வெண்ணத்தை
குழி தோண்டி புதைத்து விட்டேன்
உயிரே
உம்மை அலங்கரிக்க
உலகில் ஏதுவுமில்லை
ஒன்றும் தோன்றவுமில்லை.
Last edited: