• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

Share your திக் திக் அனுபவங்கள்..

College படிக்குறப்ப என்னோட lover செஞ்ச தரமான சம்பவம்…

ஒரே ஊருனாலும் அடிக்கடி மீட் பண்ணி பேச முடியாத சூழ்நிலை.. 2k kids போல மொபைல்ல கூட லவ்ஸ் பண்ண முடியாத காலம் அது… கால் பண்ணி பேசணும்னாலே அவ வீட்டு பக்கத்துல இருக்கிற மளிகை கடைக்கு…அதுவும் குறிப்பிட்ட நேரத்துக்கு சொல்லி வச்சு பேசணும்..


ஊரு full ஆ சொந்தக்காரங்க… எங்க சுத்துனாலும் நாம வீட்டுக்கு போறதுக்கு முன்னாடியே…நாம ஊரு சுத்துனா தகவல் வீட்டுக்கு போயிரும்… யானை வரும் பின்னே…மணி ஓசை வரும் முன்னே மாதிரி…

sms இல்ல whatspp இல்ல..எதுமே இல்லாமலே அப்போல்லாம் எப்படி தான் அவ்ளோ துல்லியமா ரொம்ப fast ஆ தகவலை சொல்லிடுறாங்கன்னு தெரில.. அப்படி இருந்தும் நம்ம நாடு அப்போ வல்லரசா ஆகாம இருந்திருக்கு பாருங்க..


Coming back to the point…


இப்படி பேசுறதுக்கும் பாக்குறதுக்குமே கஷ்ட பட்ட அந்த நேரத்துல…ஒரு நாள் என் lover ஓரு தூது அனுப்பி விட்டா.. அவங்க வீட்டு பக்கத்துல ஒரு அக்கா இருக்காங்க… அவங்க வீடு Sunday free யா இருக்கும்.. நீ அங்க வந்திடு நாம தனியா இருக்கலாம்(பேசலாம்)னு..

நானும் அத நம்பி போனேன்… அவங்க வீட்டுக்கும் போயாச்சு…
போனதும் அந்த lady எங்கள welcome பண்ணிட்டு…நீங்க உக்காந்து பேசிட்டு இருங்கனு சொல்லிட்டு எங்கள தனியா விட்டுட்டு வீட்டை பூட்டிட்டு வெளில போயிட்டாங்க…

Door locked.. Window closed.. ஓரளவு ரூம் ஒரு மார்க்கமா இருட்டு…
சின்ன வயசு வேற… பேசிட்டே இருந்தோம் few mins.. எவ்ளோ நேரம் தான் நல்லவன் மாதிரியே இருக்குறது…

Light ஆ அவ கைய நான் புடிக்க.. அவ வெக்கத்துல என்ன பாக்க… ஆஹா கண்ணா லட்டு திண்ண ஆசையா னு mind voice கேக்க…இன்னும் கொஞ்சம் கிட்ட போனேன்…:kiss:



திடீர்னு கதவை வேகமா தட்டுற சத்தம்… பாதறி போயு கதவை திறந்தா….
அந்த Lady எங்கள விட பெரிய பதட்டத்தோட டக்குனு உள்ள வந்தாங்க…வந்து…என் lover கிட்ட அடியே என் வீட்டுக்காரர் friend வெளில பாத்துட்டாரு.. அக்கம் பக்கம் வீட்டு பொம்பளைங்களும் ஒரு மாதிரியா பேசுறாங்க… அந்த ஆளு நேரா போயு என் வீட்டுக்காரர கூட்டிட்டு வந்திடுவாரு போல.. எனக்கு பயமா இருக்கு.. நீங்க கெளம்பிடுங்கன்னு ஒரு குண்ட தூக்கி போட்டாங்க..

அட பாவிகளா.. வடை போச்சேன்னு நெனச்சு வெளில போக ட்ரை பண்ணப்ப அந்த lady…நீங்க போகாதீங்க… வேற யாரும் பாத்திட போறாங்க…இன்னும் பிரச்சனை ஆகிடும்னு சொல்லி என் lover மட்டும் வெளில போக சொல்லிட்டு… அவ போனதும் door lock பண்ணிட்டாங்க…

பண்ணிட்டு அதே கட்டில்ல என் கூட உக்காந்துட்டாங்க…
அந்த ரணகளத்துளையும்… கண்ணா ரெண்டாவது லட்டா னு mind voice போக…:hearteyes:


என்ன நானே காரி துப்பிட்டு… லவ் பண்றோம் ஒரு decipline வேணான்னு சொல்லிட்டு…


இப்போ என்னங்க பண்றதுன்னு அந்த lady ய பாத்து கேக்க...
நீங்க பின் பக்கமா இருக்குற அந்த செவரு மேல ஏறி குதிச்சு போய்டுங்க… சீக்கிரம் போங்க…பயமா இருக்கு… என் வீட்டுக்காரர் கிட்ட யாரும் போட்டு கொடுத்து அவரு வர்றதுக்குள்ள சீக்கிரம் போங்கன்னு என்ன விரட்ட…

அடிப்பாவிகளா…இந்த கோலத்துல ஒரு கல்யாணம் ஆனா lady ஓட ஓரு வீட்டுல தனியா இருக்குற மாதிரி மாட்டுனா நம்ம மானம் மருவாத எல்லாம் ஊருக்குள்ள என்ன ஆவுறது.. ஊருக்குள்ள வேற நம்ம குடும்பம் பெரிய குடும்பம்.. Love மேட்டர்னா கூட நாலு செருப்படியோட போய்டும்… ஆண்ட்டி மேட்டர்னா சோத்துல விஷத்தை வச்சுருவானுங்களே…

நான் போறேன் ஆனா என் செருப்பும் வண்டியும் வெளில நிக்குதே எப்படி எடுக்கனு அந்த lady கிட்ட கேக்க… நீங்க கவலை படாதீங்க.. பக்கத்து வீட்டுல ஒரு சின்ன பையன் இருக்கான் அவன் கிட்ட சொல்லுறேன் நீங்க ஏறி குதிச்சதும் அந்த செவரு பாக்கமா அவன் உங்க வண்டி செருப்பு எடுத்துட்டு வந்திடுவான்.. சீக்கிரம் ஏறி குதிங்கன்னு என்ன மறுபடி விரட்ட…

இதுவும் போச்சான்னு புலம்ப கூட நேரம் இல்லாம அவங்க வீட்டு பின் பக்கம் போயு அந்த செவரு ஏறி குதிச்சா.. அங்க ஒரு ட்விஸ்ட்..

நான் குதிச்சது தெரு இல்ல.. பக்கத்து வீட்டோட பின் வாசல்..
அதிர்ச்சில.. நான் அந்த lady ய நிமிந்து பாக்க.. அவங்க ரொம்ப கூல் ஆ .. அந்த வீட்டு சின்ன சந்துல இருக்கிற இன்னொரு செவருல ஏறி குதிங்க தெரு வந்திடும்… சீக்கிரம் போங்க.. அந்த வீட்டுக்காரங்க பின் பக்கமா வந்திட போறாங்கன்னு பீதிய கெளப்ப…


அப்போ மாட்டுன கள்ளக்காதல் மேட்டர்.. இப்போ மாட்டுனா திருட்டு case uh.. நமக்கு சோத்துல விஷம் உறுதிடான்னு...

https://youtu.be/3rOEqH5k-Iw?si=i6riVeiCgUzlqrsQ

நானும் வேகமா போயு.. அந்த செவுரையும் ஏறி குதிச்சு ஒரு வழியா நடு தெருவுக்கு வந்தேன்..

நடந்த சம்பவத்துலயே ரொம்ப sharp அந்த பக்கத்து வீட்டு சின்ன பையன் தான்… கரெக்ட் timing ல வண்டியோட வந்து நின்னான்..
வண்டியும் செருப்பும் குடுடா தம்பின்னு வாங்கிட்டு திரும்பி பாக்காம போய்ட்டேன்..


இதெல்லாம் கூட ஓகே.. ஆனா next week என் lover again தூது அனுப்பினா.. இன்னொரு அக்கா வீடு free இந்த வாரம் வரியானு… :bandid:

ஆள விடும்மா தாயே.. நான் வரவே இல்லனு சொல்லி...:heystop:

https://youtu.be/AWVYM6qUR3M?si=2jDspgiRmzFH047b
Idhella thevaya kumaruuu...

Namma kudumbathuku edhella thevaya...
:Cwl: :Cwl: :Cwl: :Cwl:
 
Top