
அழகிய மாலை நேரம்!
மிதமான காற்று!
மழைக்கு அரிகுரி இல்லை!

நான் இருக்கும் இடம் புரியாமல் நீ!

நீ சென்ற வழி அறியாமல் நான்!

ஒரு வழியாக சேர்த்து வைத்தது அலைபேசி!!


ஆனாலும் செல்லும் இடம் தெரியாமல் நாம்!

வண்ணா வண்ண குழுப்பங்களுடன்!
மனத்தில் சுமந்த அன்புடன்! இந்த தருணம் கனவா நினைவா என்று எண்ணிக்கொண்டு இருக்க!!

நாம் நின்றோம் பனிக்கூழ் கடையில்!!

பனிக்கூழின் ருசி அறிந்தேன் நீ அதை பகிர்ந்த போது..

கிடைத்த நொடி குறைவே!!
ஆனல் மனது சொல்ல நினைத்ததோ ஆயிரம்!!
பேச வழி இல்லாமல்!
இதழில் மொழி இல்லாமல்!
நாம் தயங்கிய அந்த நொடியை

புகைப்படம் எடுக்க ஓடி வந்ததோ சட்டென அங்கு கருமேகங்கள்!!
வீசும் காற்று இசை மீட்ட!
மின்னல்கள் மனதில் உன் பெயரை கீற!!
இடி ஓசை வானை பிளக்க!!
இதயம் நனைய பொழிந்தது!!

ஆம்!!!
கைகள் தொடாத, இதழ்கள் இணையாத,விரல்கள் கோர்க்காத, நம் இருவருக்கும் வான் மழை முத்தமிட்டதோ என்று எண்ணி வியக்கிறேன்..

பொன்னான நேரம் மழையினால் முடிவிற்கு வந்தாலும்!!!

என் நெஞ்சில் நித்தமும் மும்மாரி பொழிந்து கொண்டே இருக்கும் இந்த அழகிய நினைவுகள் !!!

உணர்ந்தேன் ஒரு புதிய உணர்வை!!


Awesome writing Janu maaa



long drive poganum ngaaaa 

enayu enroll panunga pleech

.... lock Karo


