
சொல்ல தயங்கும்
ஆசைகளையெல்லாம்
கோர்க்கின்றேன்
உன்னிடம்
சேர்த்திட…
போர்வைக்கு
அடங்காத
குளிரும்
உன் தோள்சாய
அடங்கிப்போனது…
உனை
வர்ணிக்கும் போதே
கவிதையும்
கொஞ்சம் வெட்கப்படுகிறது...
மனதின்
மையல்களை
மையில் கலந்து
விழியிலொரு
கவிதை
நீ ரசிக்க…
அருகில்
நீயில்லையென்று
மனதுக்கு தெரிந்தாலும்
எங்கோ உன் பெயர் ஒலிக்க
விழிகளும் தேடவே
செய்கிறது உன்னை…
வாடிய மலரைப்போல்
உயிறற்று கிடக்குறது
வாசிக்க நீயின்றி வரிகள்…
மயிலிறகாய்
உன் நினைவு
மனதை வருட
மறந்தே போகிறேன்
என்னை…
உன் எண்ணங்களின் வண்ணங்கள்
என் மனவானில் வானவில்லானது…



Nala Irukku but Enanu Puriyala!! Yaravathu Purija Solunga pa





nallaa habit unakuu saamyy... Keep it up

