
இந்த பூமியில எப்ப வந்து நீ பொறந்த !!!
என் புத்திக்குள்ள தீப்பொறிய நீ வெதச்ச !!!
அடி தேக்கு மர காடு பெருசுதான்!!
சின்ன தீக்குச்சி உசரம் சிறுசுதான்!!
அடி தேக்கு மர காடு பெருசுதான்!!
சின்ன தீக்குச்சி உசரம் சிறுசுதான்!!
ஒரு தீக்குச்சி விழுந்து புடிக்குதடி
கருந்தேக்கு மரக்காடு வெடிக்குதடி
உசுரே போகுதே உசுரே போகுதே
உதட்ட நீ கொஞ்சம் சுழிக்கயிலே
ஓஓ… மாமன் தவிக்கிறேன்
மடி பிச்ச கேக்குறேன்
மனச தாடி என் மணி குயிலே !!!
அக்கரைச் சீமையில் நீ இருந்தும்
ஐவிரல் தீண்டிட நினைக்குதடி
அக்கினி பழமுன்னு தெரிஞ்சிருந்தும்
அடிக்கடி நாக்கு துடிக்குதடி
ஒடம்பும் மனசும் தூரம் தூரம்
ஒட்ட நினைக்கேன் ஆகல
மனசு சொல்லும் நல்ல சொல்ல
மாய ஒடம்பு கேக்கல !!!
என் கட்டையும் ஒரு நாள் சாயலாம்
என் கண்ணுல உன் முகம் போகுமா
நா மண்ணுக்குள்ள உன் நெனப்பு மனசுக்குள் !!!