AgaraMudhalvan
Epic Legend
2.Love
எந்தளவிற்கு உருகி உருகி ஒரு காதல் வார்த்தைகளில் வெளிப்படுத்தப்படுகிறதோ அதேயளவு அதில் போலித்தனமும் சேர்ந்திருக்கும்.
நான் உனக்காகவே வாழ்கிறேன் உனக்காகவே சாகிறேன், -என்றால் நீயும் எனக்காகவே வாழ்/சாவு
உன்னைத்தவிர வேறு யாரையும் நினைத்துப் பார்க்க மாட்டேன் -என்றால் நீயும் பார்க்கக்கூடாது.
ஒவ்வொரு காதல் வெளிப்பாட்டிலும் இப்படி மறைமுக கட்டளை ஒளிந்திருக்கும்.
மறைமுக கட்டளைகளுக்குள் நிர்பந்தப்படுத்தப்படுகிறோம் என்பதே பெண்ணுக்கு மிகத் தாமதமாகத்தான் தெரியவரும்.
இந்த உறவில் எங்கு இடறினோம் என்ன பிரச்சினை என்று அவள் உணரும் போது, உன்னை விரும்புகிறேன் விரும்புகிறேன் என்று சொல்லிச் சொல்லியே அவளுக்கான அழகிய கூண்டை ஆண் வடிவமைத்து முடித்திருப்பான்.
பெண்ணை,பெண்ணின் உடலை உரிமை கொண்டாட ஆசைப்படும் மனச் சிறையிலிருந்து விடுபடத் தெரியாமல் அவளையே கூண்டில் வைத்து விடுகிறான்.
அவள் விடுவிக்கச் சொல்லிக் கோரும் போது, நான் உன் மீது செலுத்தும் அன்பை நீ உனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறாய் என்று அவளையே சாடவும் செய்வான்.
இதற்கு பெயர் அன்பல்ல டார்ச்சர் என்று அவளுக்கு தொண்டை கிழிய கத்த வேண்டும் போலிருக்கும்.
அன்பை வழங்கும் போது அதனை சாதகமாகப் பயன்படுத்தும் உரிமையும் சேர்த்தேதான் கொடுக்கப்படுகிறது. சாதக உரிமைக்கு அனுமதி இல்லையென்றால் நீங்கள் செலுத்துவது அன்பல்ல, ஆளுமை!
To Be Continued