꧁❤•༆ TAKE IT EASY ༆•❤꧂
வாழ்க்கை பயணத்தில் எந்த ஒரு உறவும் அதிகபட்சம் 25 ஆண்டுகள் மட்டுமே நெருக்கமானது என்கிறது ஓர் ஆய்வு.
அதற்கு மேல் நீடித்தால் அதனை வரம் என்றே சொல்லலாம்.
பெற்றோர், பிள்ளை உறவும் 25 ஆண்டுகளே நெருக்கமாக இருக்கிறது.
பள்ளி, கல்லூரி நண்பர்களும் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு நெருக்கம் காட்டுவதில்லை.
வேலை பார்க்கும் இடம், பக்கத்து வீட்டு நட்பு 10 ஆண்டுகள் நீடிப்பதே கடினம்.
இதில் கணவன், மனைவி உறவு மட்டுமே 25 ஆண்டுகளைத் தாண்டியும் தொடர்கிறது.
காதல், நட்பு, உறவு போன்ற பந்தங்களில் கருத்துவேறுபாடு ஏற்படுவது சகஜம், காரணம் சொல்லாமல் சிலர் பிரிவதுண்டு.
சிலர் பிரிவதற்காக பொய் கூறுவதுண்டு. அதனால் வருத்தம் வரலாம்.
மலர்ந்த பூ செடிக்கு வலிக்காமல் காம்பில் இருந்து விழுவதைப் போன்று அமைதியாக விலகுங்கள்.
எல்லா உறவும் ஒரு நாள் பிரியவே செய்யும் என்பதை புரிந்துகொண்டு தள்ளி நில்லுங்கள்.
அவர்களை வெறுக்க வேண்டாம்.
வழியனுப்பி வையுங்கள்.