அவளைத்தான் தேடுகிறேன்
என்பது மட்டுமேனோ
அவளுக்குப் புரிவதே இல்லை...
முத்தங்களால் ஆட்கொள்ள விழைகையில் சட்டென
முகம் திருப்பிக் கொள்கிறாள்...
சகலமும் சிந்திக்க வைத்துவிட்டு
சடுதியில் மறைந்து வளிப்பமிட்டு
நின்று மகிழ்ந்து தொலைக்கிறாள்...
அத்தனையும் அறிந்தே எனை வேண்டுமென்றே கொல்கிறாள்
அலைபாய்வது கண்டு நகைக்கிறாள்...
இனியொரு முறை முத்தமிடலில்
மனதை முழுவதுமாய்ச் சொல்லிவிட
நாளும் கனவுகளில் எத்தனிக்கிறேன்...
கொள்வாளோ... கொல்வாளோ...
நானறியேன் ஆனால் அவளறிவாள்
அறிந்தே தவிர்ப்பதில் அரக்கியவள்...
