அவன் எழுதித் தீராத
பெரும் அத்தியாயம்
அவள் மட்டுமே
என்ற கர்வம் சூடிட..
கனிந்திருப்பாள்...
காதல் ததும்ப
காத்திருப்பாள்...
அவனோ..
புதிர் அவிழ்த்தே
பதுமை அவளின் பித்தனாகிறான்
சாராம்சம் தேடி அயர்ந்தே
பதி மேவி போர்த்திட
சயனிக்கிறான்...
அவர்களுக்குள்ளான
அதீதம் கூடிய
தினமொரு தேடலே
சலிக்காத காதலின் வழி
அகம் உணர்ந்து அனபினிக்க
மெய் புணரும் கா
மத்தை பரிசளிக்கிறது...